புதுடெல்லி: இந்தியா (India) தனது அண்டை நாடுகளுடனும், தனது எல்லைப் பகுதி முழுவதிலும் அமைதியான சூழலையே விரும்புகிறது. எனினும், நம்மை யாரேனும் சீண்டினால் அதற்கு சரியான பதிலடியைக் கொடுக்க நாம் தயாராக உள்ளோம். அந்த வகையில் சீன (China) எல்லைப் பகுதியான LAC-யில் சீனா செய்யும் அனைத்து சதிகளையும் முறியடிக்கும் திறன் இந்திய ஆயுதப்படைகளுக்கு உள்ளது என்று பாதுகாப்பு தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் பிபின் ராவத் வியாழக்கிழமை தெரிவித்தார். "சமீபத்திய காலங்களில் சீனாவின் பல ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நாம் கண்டு வருகிறோம். எனினும் நாம் இவற்றைக் கையாளும் திறன் கொண்டவர்கள். நமது முப்படைகள் எல்லைகளில் அச்சுறுத்தல்களைக் கையாளும் திறன் கொண்டவை" என்று ராவத் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாங்கோங் த்சோவில் (Pangong Tso) சீன ஆக்கிரமிப்புக்கு எதிரான இந்திய நடவடிக்கைகளை நியாயப்படுத்திய ராவத், இந்தியாவின் எதிர் தாக்குதல் கொள்கைகள், நம்பகமான இராணுவ சக்தி மற்றும் பிராந்திய செல்வாக்கால் ஆதரிக்கப்படாவிட்டால், சீனாவின் முன்னுரிமையையும் அவர்களது அராஜகச் செயல்களையும் ஒப்புக்கொள்வது போலாகிவிடும் என்று கூறினார்.


ஜம்மு-காஷ்மீரில் பிரச்சினையை உருவாக்க பாகிஸ்தான் ஒரு பினாமி யுத்தத்தை முன்னெடுத்து வருவதாகவும், தனது மண்ணில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து, நிதியுதவி செய்வதாகவும் ஜெனரல் பிபின் ராவத் (General Bipin Rawat) குற்றம் சாட்டினார். இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய ராவத், வடக்கு எல்லைகளில் வளர்ந்து வரும் எந்த அச்சுறுத்தலையும் பாகிஸ்தான் (Pakistan) பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்றும், இதை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு இந்தியாவுக்கு சிக்கலை உருவாக்கக் கூடும் என்றும் கூறினார்.


ALSO READ: காஷ்மீர் பாராமுல்லாவில் பதுங்கு இடங்கள், பயங்கர ஆயுதங்கள்: பகீர் Report!!


இந்தியாவை சீண்டினால் பாகிஸ்தான் பெரும் இழப்பை சந்திக்கும்:


எனினும், இந்தியாவை எதிர்த்து ஏதேனும் தவறான முயற்சியை மேற்கொண்டால், பாகிஸ்தான் பெரும் இழப்பை சந்திக்கும் என்றும் ராவத் கூறினார். பாகிஸ்தானை எதிர்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என ராவத் எச்சரித்தார். இந்தியா பல சிக்கலான அபாயங்களையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ளது. அணுசக்தி முதல் வழக்கமான போர் நடவடிக்கைகள் என இந்த சவால்களின் வரம்பு விரிந்து பரந்து உள்ளது என்றார் அவர்.


அவரது கருத்துக்கள் பாங்காங் த்சோவின் தெற்கே தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்களின் பின்னணியில் வந்துள்ளன. சர்ச்சைக்குரிய இடங்களில், சீனா ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்ற முயற்சிக்கிறது என்ற தனது நிலைப்பாட்டில் இந்தியா நிலையாக இருந்தாலும், நாட்டின் அரசியல் மற்றும் இராஜதந்திர தலைமை, எல்லையில் உள்ள நிலைமையை சமாளிப்பதில் பேச்சுவார்த்தைகள்தான் சரியான தீர்வை அளிக்கும் என்பதை கடுமையாக வலியுறுத்தியுள்ளது.


"இராணுவ மற்றும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தான் இதற்கான ஒரே ஆக்கப்பூர்வமான வழியாகும்.  அமைதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். படைகளை முழுமையாக நீக்கி, எல்லைப் பகுதிகளில் அமைதியை விரைவாக மீட்டெடுக்கும் நோக்கத்துடன் ஈடுபடுமாறு சீனாவை கடுமையாக வலியுறுத்துகிறோம்,” என்று வெளியுறவுத் துறை அமைச்சக (Ministry of External Affairs) செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா ஒரு மெய்நிகர் மாநாட்டில் தெரிவித்தார். 


ALSO READ: IRCTC E-Ticket மோசடி கும்பல் தலைவன் கைது: வெளிநாட்டு சதி அம்பலம்!!