குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்த முப்படை விசாரணைக்குழு அறிக்கை வெளியானது
குன்னூர் அருகே கடந்த டிசம்பர் மாதம் 8-ந்தேதி விமானப்படை ஹெலிகாப்டர், விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
குன்னூர் அருகே கடந்த டிசம்பர் மாதம் 8-ந்தேதி விமானப்படை ஹெலிகாப்டர், விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த விமானி வருண் சிங், சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் பின்னர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் இந்த ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் குறித்த காரணத்தை அறிய முப்படைகளின் விசாரணைக் குழு விமானத்தில் தரவு பதிவுகள், காக் பிட்டின் குரல் பதிவுகள் ஆகியவற்றை தீவிரமாக ஆய்வு செய்தது. இந்த நிலையில், முப்படைகளின் விசாரணைக் குழு முதல் கட்ட விசாரணையை முடித்துள்ள நிலையில், அதன் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
ALSO READ | ஜெனரல் பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து விசாரணை புகைப்பட கேலரி
அதில், ஹெலிகாப்டர் விபத்திற்கு இயந்திரக் கோளாறோ, கவனக்குறைவோ காரணம் அல்ல எனவும், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது. எதிபாராத விதமாக ஏற்பட்ட திடீர் வானிலை மாற்றத்தினால், மேகக்கூட்டங்களுக்குள் ஹெலிகாப்டர் நுழைந்ததால் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | தமிழகத்தில் பொங்கும் ‘பொங்கலோ பொங்கல்’; மற்ற மாநிலங்களில் 'மகரசங்கராந்தி’..!!
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR