அனைத்து மத்திய ஆயுத காவல் படை (CAPF) கேண்டீன்களும் இனி உள்நாட்டு தயாரிப்புகளை மட்டுமே விற்பனை செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அறிவிப்பானது 2020 ஜூன் 01 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து CAPF கேன்டீன்களுக்கும் பொருந்தும் என்றும் அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.



இந்த நடவடிக்கை 50 லட்சம் குடும்பங்களுக்கு நலம் பயக்கும், சுமார் 10 லட்சம் CAPF பணியாளர்கள், உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்துவார்கள் என்றும் ஷா குறிப்பிட்டுள்ளார்.


READ | பிரதமர் மோடியின் விழிப்புணர்வு உரையில் வெளியான சிறந்த மேற்கோள்கள்...


முன்னதாக பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் தேச மக்களுடன் உரையாற்றினார். தனது உரையில் அவர், நாட்டை தன்னம்பிக்கை கொள்ளச் செய்யவும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தவும் குடிமக்களிடம் வலியுறுத்தினார். பிரதமர் உரையின் ஒரு நாள் கழித்து உள்துறை அமைச்சரின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.



பிரதமர் மோடியின் வேண்டுகோளைப் பின்பற்றி நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும் என்றும் ஷா மக்களை கேட்டுக்கொண்டார்.


READ | கொரோனா எதிரொலி... விவசாயத்தில் கவனம் செலுத்த மோடி அரசு திட்டம்...


செவ்வாயன்று தனது உரையில், பிரதமர் மோடி உள்நாட்டு பொருட்களின் முக்கியத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். நெருக்கடி காலங்களில், உள்ளூர் விளைபொருள்கள் நமது கோரிக்கையை பூர்த்திசெய்து நம்மை காப்பாற்றியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது, நாட்டின் அனைத்து மத்திய ஆயுத காவல் படை (CAPF) கேண்டீன்களில் உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த உள்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.