புதுடெல்லி: தொற்று நோய்கள் சட்டம், 1897 இல் திருத்தம் செய்வதற்கான கட்டளை அறிவிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான பணிகளில் முன்னணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய செயலுக்கு மத்திய மாநில அரசுகள்  எச்சரிக்கை விடுத்தன. 


இந்த நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- 


சுகாதார ஊழியர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கட்டளை ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களை துன்புறுத்தினால் 6 மாதம்  மற்று ம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். சிறை தண்டனையுடன் ரூ. 1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபாதம் விதிக்கப்படும். மருத்துவர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் மீதான தாக்குதல்கள் பொறுத்துக்கொள்ளப்படாது.


மருத்துவ பணியாளர்களின் வாகனமோ, கிளினிக்குக்ளோ சேதப்படுத்தப்பட்டால், சந்தை மதிப்பை விட இரு மடங்கு தொகை இழப்பீடாக அளிக்கப்படும். 


இந்த தொற்றுநோயிலிருந்து நாட்டை காப்பாற்ற முயற்சிக்கும் சுகாதார ஊழியர்கள் துரதிர்ஷ்டவசமாக தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். அவர்களுக்கு எதிரான வன்முறை அல்லது துன்புறுத்தல் சம்பவங்கள் எதுவும் பொறுத்துக் கொள்ளப்படாது. இது தொடர்பான அவசர சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்படது. மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை தாக்கினால் குற்றவியல்  தண்டனை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத படி நடவடிக்கை எடுக்கப்படும். என்றார். 


கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் நாவல் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 1,329 ஆக அதிகரித்துள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை நாட்டின் மொத்த கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 18,985 ஆக உயர்ந்தது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனுடன், நேற்று முதல் 44 இறப்புகள் பதிவாகியதில் இருந்து வெடித்ததில் இருந்து 603 இறப்புகள் பதிவாகியுள்ளன.


இதுவரை, இந்தியாவில் 15,112 செயலில் உள்ள வழக்குகள் உள்ளன. வைரஸால் பாதிக்கப்பட்ட 77 வெளிநாட்டினரும் உள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தவிர, குறைந்தது 3,259 நோயாளிகள் அதிக தொற்று நோயிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அல்லது குணப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் ஒருவர் நாட்டிலிருந்து குடிபெயர்ந்துள்ளார்.