சாலை விபத்து... பணம் இல்லாமல் சிகிச்சை பெற மத்திய அரசு கொண்டுவரப்போகும் சூப்பர் திட்டம்
Central government New Scheme | சாலை விபத்து ஏற்படும்போது பணமில்லாமல் சிகிச்சை பெறும் திட்டத்தை விரைவில் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
Central government New Scheme | உலகளவில் சாலை விபத்து நடக்கும் நாடுகளில் இந்தியா முதன்மையான நாடாக உள்ளது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் உயிரிழப்புகள் அதிகம் நடப்பதை குறைக்கவும், விபத்தில் சிக்கியவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் முறையாக கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசும்போது, விபத்து குறித்து 24 மணி நேரத்திற்குள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் சாலை விபத்துகளின் போக்கை கருத்தில் கொண்டு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை நடத்தினார். அதில், விபத்தில் உயிர் பிழைப்பவர்களுக்கு 7 நாட்களுக்கு ₹1.5 லட்சம் வரை ரொக்கமில்லா சிகிச்சையை வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார். இந்த திட்டம் மார்ச் 2025 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதிய பேருந்துகள் மற்றும் டிரக்குகளுக்கு ஆடியோ எச்சரிக்கை அமைப்பு பொருத்துவது குறித்தும், இது ஓட்டுநர்கள் தூங்கும்போது அவர்களை எச்சரிக்கும் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
அமைச்சர் நிதின் கட்கரி மேலும் பேசும்போது, 2022 ஆம் ஆண்டில் வாகனம் மீது லாரிகள் மோதி மட்டும் 33,000 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையை சுட்டிக் காட்டிய அவர், மத்திய அரசு இரண்டு நாட்களுக்குள் அனைத்து மாநிலங்களின் போக்குவரத்து செயலாளர்கள் மற்றும் கமிஷனர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவித்தார். பணமில்லா காப்பீட்டுத் திட்டத்தில், அசாம், சண்டிகர், பஞ்சாப், உத்தரகண்ட், புதுச்சேரி மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் இப்போது செயலில் உள்ளது.
இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம் இதுவரை 6,840 பேர் பயனடைந்துள்ளனர். திட்டம் தொடங்கப்பட்டவுடன், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒருவரின் கோல்டன் பீரியட் சொல்லப்படும் நேரத்தில் சிகிச்சையை உறுதி செய்வதே மத்திய அரசின் இலக்கு எறும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் ஏற்படும் சாலை விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். இதனால் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தடுக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த திட்டம் இந்தியா முழுமைக்கும் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்தால் 50,000 உயிர்களைக் காப்பாற்ற உதவ முடியும்.
2023 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, அந்த ஆண்டில் சாலை விபத்துகளில் இந்தியா முழுவதும் 1.72 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 4.2 விழுக்காடு அதிகம். இதனை கருத்தில் கொண்டே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ