Delli Election 2025 News In Tamil: டெல்லி தேர்தல் களத்தில் மூன்று முக்கிய கட்சிகளான ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி. இந்தமுறை யாருக்கு வாய்ப்பு? டெல்லி மக்களின் மனநிலை என்ன? நாடாளுமன்ற தேர்தம் மற்றும் சட்டமன்ற தேர்தல் விவரங்களை பார்ப்போம்.
டெல்லியில் பிப்ரவரி 5 ஆம் தேதி (புதன்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் பிப்ரவரி 15, 2025 அன்று முடிவடைகிறது. அதற்கு முன்னதாகவே புதிய சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 70 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான மும்முனை போட்டி நிலவுகிறது, குளிர் அலையின் பிடியில் உள்ள தேசிய தலைநகரில் அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து, உத்தரப்பிரதேசத்தில் உள்ள மில்கிபூர் மற்றும் தமிழகத்தில் ஈரோடு (கிழக்கு) ஆகிய தொகுதிகளுக்கும் ஒரே நாளில் (பிப்ரவரி 5) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8 ஆம் தேதி (சனிக்கிழமை) வெளியிடப்படும்.
டெல்லியை பொறுத்த வரை பெண்களுக்கு நிதியுதவி, இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை கட்சிகள் அளித்துள்ளன. இந்தமுறை டெல்லியில் வெல்லப் போவது யார்? என்று பார்ப்போம்.
டெல்லியை பொறுத்தவரைக்கும் ஆம் ஆத்மி கட்சியின் கோட்டையாக விளங்குகிறது முன்னாடி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சிக்குப் பிறகு பாஜக ஆட்சியை பிடிக்குமா? என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, ஆம் ஆத்மி அதிர்ச்சி அளித்தது. காங்கிரஸ் வசம் இருந்து டெல்லி ஆட்சியை தட்டிப் பறித்தது ஆம் ஆத்மி.
இந்நிலையில், இந்த சட்டசபை தேர்தலில் பாஜக எப்படியாவது டெல்லியில் ஆட்சி செய்ய வேண்டும் என்ற முனைப்பில் வியூகம் வகுத்து வருகிறது. அதேநேரத்தில் காங்கிரஸ் மீண்டும் அங்கே கால் பதிக்க முடியுமா? என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
டெல்லியில் கள நிலவரம் என்ன என்று பார்த்தால், டெல்லி மக்களை பொறுத்தவரை சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என்ற அடிப்படையில் வாக்களிப்பார்கள். அதாவது நாடாளுமன்றத் தேர்தல் என்றால் பாஜாகவுக்கு ஓட்டு போடுவார்கள். சட்டமன்றத் தேர்தல் என்றால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டு போடுவார்கள். கடந்த மூன்று தேர்தல்களில் இப்படித்தான் வாக்களித்து வருகிறார்கள்.
கடந்த மூன்று தேர்தல் குறித்து பார்த்தால், நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் உள்ள மொத்தம் ஏழு தொகுதிகளில் பாஜக 2014, 2019 மற்றும் 2024 என கடந்த மூன்று நாடாளுமன்றத் தேர்தலிலும் ஏழுக்கு ஏழு தொகுதியையும் கைப்பற்றியது. மறுபுறம் சட்டமன்றத் தேர்தல் குறித்து பார்த்தால், 2013-ல்ல தான் முதல் முறையா ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறார்கள். அதுவும் கூட்டணி ஆட்சி. ஆனால் அடுத்து 48 நாளில் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்திவிட்டு, மீண்டும் தேர்தலை சந்திக்கிறார்.
முதலில் மொத்தம் 70 தொகுதிகளில் 28 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கிறார். பிறகு 48 நாளில் ராஜினாமா செய்ததற்கு மன்னிப்பு கேட்டு மக்களை சந்தித்தார். மீண்டும் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். இந்தமுறை டெல்லி மக்கள் அவருக்கு அபாரமாக ஆதரவு அளித்தனர். அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்தார்கள். 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை டெல்லி மக்கள் அள்ளிக் கொடுத்தார்கள்.
அடுத்த தேர்தலில் அதாவது 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை மக்கள் அள்ளிக் கொடுத்தார்கள். ஆய்ந்து வருட ஆட்சிக்கு பிறகு வெறும் ஐந்து தொகுதிகள் மட்டும் தான் குறைந்திருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போதே தெரிகிறது.. அவ்வளவு செல்வாக்குடன் அங்கே ஆம் ஆத்மி கட்சி திகழ்கிறது.
டெல்லி தேர்தல் நிலவரம் இப்படி இருக்கும் பட்சத்தில், டெல்லியை பொறுத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசு இடையே ஏழாம் பொருத்தம் தான். அதாவது டெல்லி முதலமைச்சர், துணை முதலமைச்சர்கள் மற்றும் சில அமைச்சர்களை மத்திய அரசு சிறையில் தள்ளியது. இது பொதுமக்களுக்கு நன்றாகவே தெரியும்.
இந்தியாவிலேயே ஒருவர் முதலமைச்சராக இருக்கும் பொழுது சிறையில் தள்ளப்படுகிறார் என்றால் அது அரவிந்த் கெஜ்ரிவால் தான். மற்ற முதலமைச்சர்கள் எல்லாம் சிறை செல்லவில்லையா? என்ற கேள்வி எழலாம். ஜெயலலிதா அவர்கள் கூட முதலமைச்சராக இருக்கும் போது தீர்ப்பு வந்ததை அடுத்து ஜெயிலுக்குள் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் சிறை செல்லும் முன்பே ராஜினாமா செய்துவிட்டு, வேறொருவரை முதலமைச்சராக அமர வைத்துவிட்டு ஜெயிலுக்கு சென்றார்.
முதலமைச்சராகவே ஜெயிலுக்கு போனவர் அரவிந்த் கெஜ்ரிவால் தான். பிறகு அவருக்கு பெயில் கிடைத்ததும் வெளியில் வந்த பிறகு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். வேறு ஒருவரை அந்த முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தார். மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் அந்த முதலமைச்சர் நாற்காலியில் அமருவேன் என்று சபதம் செய்து மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். அந்த வகையில் உண்மையிலேயே டெல்லியில் சக்தி வாய்ந்த தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் டெல்லியை பொறுத்த வரை அவருக்கு அனுதாப அலை இருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இதேபோல முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கைதான பிறகு ராஜினாமா செய்துவிட்டு, வேறு ஒருவரை முதல்வராக அமர்த்திவிட்டு சிறைக்கு சென்றார. அதன்பிறகு சிறையில் இருந்து வெளியே வந்து சந்தித்து மீண்டும் முதலமைச்சராக அமர்ந்து கொண்டிருக்கிறார். அதே பாணியில் அரவிந்த் கெஜ்ரிவால் வாய்ப்பு இருக்குமா? என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
சக்தி வாய்ந்த தலைவராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்த பாஜக பல முயற்சிகளை செய்து வருகிறது. அதில் ஆம் ஆத்மி கட்சி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகளை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது.
கடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் 10,000, 20,000 வாக்கு வித்தியாசம் கொண்ட தொகுதிகளை பார்த்தால், 11 தொகுதிகள் மட்டும் தான் 10000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதேபோல 23 தொகுதிகள் 20000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எனவே இந்த தொகுதிகளை குறிவைத்து பாஜக வியூகம் வகுத்து வருகிறது. அதேநேரத்தில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் கொண்ட 13 தொகுதிகளிலும், 30 ஆயிரத்துக்கு மேல் வாக்கு வித்தியாசம் கொண்ட 15 தொகுதிகளும் எங்களுக்கு தான். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என ஆம் ஆத்மி கூறி வருகிறது.
அதாவது ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள், "70 தொகுதிகளில் நாங்கள் எப்படியும் 40 தொகுதிகளை எளிதாக கைப்பற்றி விடுவோம். ஆட்சி அமைக்க 36 தொகுதிகள் இருந்தால் போதும். எனவே அதிக இடங்களை வெல்லுவோம். பாஜகவின் அனைத்து சதியும் முறியடிக்கப்படும்" எனக் கூறிவருகின்றனர்.
கடந்த இரண்டு தேர்தலை பார்த்தலா, ஆம் ஆத்மி கட்சியின் வாக்கு வங்கி குறைவே இல்லை. அப்படி தான் இருக்கிறது. 2015 தேர்தலில் ஆம் ஆத்மி 55% வாக்குகள் பெற்றிந்தார்கள். அடுத்த தேர்தலில் 54% வாக்குகள் வாங்கி இருந்தார்கள். வெறும் 1% தான் இழந்திருக்கிறார்கள். அதேநேரத்தில் பாஜக 6% வாக்குகளை அதிகப்படுத்தி உள்ளது. 2015-ல் 33% ஆக இருந்த பாஜகவின் வாக்கு வங்கி 2020-ல் 39% ஆக உயர்ந்து இருக்கிறது. அதாவது இந்த 6% வாக்கு எங்கிருந்து வந்திருக்கிறது எனப்பார்த்தால், காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் பாஜகவிடம் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் 10% வாக்கு வங்கி 4% ஆக குறைந்துவிட்டது. அந்த 6% பாஜகவிற்கு சென்றுவிட்டது. அதனால் தானா ஆம் ஆத்மி கட்சியினர் "எங்களுக்கு வாக்களிப்பவர்கள் எங்களுக்கே தான் வாக்களிக்கிறார்கள். லேசான சலனம் இருக்கிறது. ஆனால் ஆட்சியை நாங்கள் கோட்டை விடமாட்டோம்" உறுதியோடு இருக்கிறார்கள்.
இந்தமுறை எங்களுக்குத்தான் என்று பாஜாகவும் மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்கிறது. எப்படியாவது எங்காவது ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று காங்கிரஸ் கட்சியும் உற்றுநோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறது. டெல்லி அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க - நாடாளுமன்றத்தில் மோதல்! ராகுல் காந்தி தான் தள்ளிவிட்டார்.. பாஜக புகார்!
மேலும் படிக்க - பல துறைகளில் பட்டையை கிளப்பியவர்... டெல்லி முதல்வராகும் அதிஷி மர்லினா - யார் இவர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ