கலால் வரியைக் குறைத்தால் பெட்ரோல் டீசல் விலை குறையும் -தாமஸ் ஐசக்
கலால் வரியைக் குறைத்தாலே பெட்ரோல் டீசல் விலை குறையும் என கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்காத நிலையில் இந்தியாவில் மட்டும் ஏன் விலை அதிகரித்துக்கொண்டே போகிறது? என கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை பற்றிய விவாதங்களில் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. கச்சா எண்ணெயின் விலை குறைவாக இருக்கும் போது, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மட்டுமே உச்சத்தில் இருப்பது ஏன் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், பெட்ரோல் டீசல் விலை பற்றி கேரளா நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கூறியது, பெட்ரோல் - டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதில் பிரச்சனைகள் உள்ளன. ஏனெனில், பெட்ரோல் - டீசல் மீது 200 முதல் 300 சதவிகிதம் வரை பாஜக அரசு கலால் வரி விதிக்கிறது. இந்த கலால் வரியைக் குறைத்தாலே போதுமானது. ஆனால் மத்திய அரசு செய்யமாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் வரிகளை குறைத்துக் கொண்டால் சாமானிய மக்களின் பாரம் குறையும். இதற்க்கு அரசு செவி சாய்க்குமா? என பொது மக்கள் எதிர்பார்பாக இருக்கிறது.