இந்தியாவில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 60% அதிகரிப்பு!
இந்தியாவில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் 60% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது!
இந்தியாவில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் 60% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது!
இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளதாவது... இந்தியாவில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கனிசமாக அதிகரித்துள்ளது. அது மட்டுமின்றி, வருமான வரி செலுத்துவோரின் ஆண்டு வருவாயும் நிகராக உயர்ந்துள்ளது.
வருமான வரி செலுத்துவோரில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டுவோர் எண்ணிக்கை 60% உயர்ந்துள்ளது. கடந்த 2014-15-ஆம் ஆண்டில், வருமான வரி தாக்கல் செய்த நிறுவனங்களில், 1 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டிய நிறுவனங்களின் எண்ணிக்கை, 88,649-ஆக இருந்த நிலையில், 2017-18-ஆம் ஆண்டில் 1.40,000 உயர்ந்துள்ளது.
இந்த எண்ணிக்கை, நான்கு ஆண்டுகளுக்கு முந்தையதை விட 60% அதிகம். அதே போல், வருமான வரி செலுத்திய தனி நபர்களில், 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோரின் எண்ணிக்கை, 48,416-லிருந்து, 81,344-ஆக உயர்ந்துள்ளது.
அதேப்போல் வரி மதிப்பீட்டு ஆண்டு, 2014-15-ல், மாத சம்பளம் பெறும் 1.70 கோடி பேர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்த நிலையில், 2017-18-ல் இந்த எண்ணிக்கை, 2.33 கோடியாக அதிகரித்துள்ளது.
இதேப்போல் மாத சம்பளம் வாங்குவோரின் சராசரி ஆண்டு வருமானம் 5.76 லட்சத்திலிருந்து, 6.84 லட்சமாக அதிகரித்துள்ளது. மாதம் சம்பளம் பெறாத, தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் பெயரில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்!