கடந்த 2008-ம் ஆண்டு கடல்வழியாக தீவிரவாதிகள் மும்பைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனைத் தொடர்ந்து கடலோர காவல்படையை பலப்படுத்தும் வகையில் மத்திய அரசு ஒரு புதிய தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


அதன்படி, டெல்லியில் பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கடலோர காவல்படையில் ரோந்து கப்பல்கள், படகுகள், ஹெலிகாப்டர்கள், விமானம் மற்றும் முக்கிய செயல்பாட்டு உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேலும் பலப்படுத்த ஒப்புதல் பெறப்பட்டது.


வரும் 2022-ம் ஆண்டிற்குள் 175 கப்பல்கள், 110 விமானங்கள் ஆகியவற்றை கடலோர காவல்படையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் கடற்பகுதியில் நடைபெறும் திருட்டு, கடத்தல், எண்ணெய் கசிவு மற்றும் மாசு கட்டுப்பாடு ஆகியவற்றை கண்காணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர காவல்படையை பலப்படுத்த ரூ.32,000 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


இந்தியாவைப் பொறுத்தவரை 1,382 தீவுகளுடனான 7,516 கி.மீ கடலோரப் பகுதியையும், 2.01 மில்லியன் சதுர கி.மீ பொருளாதார மண்டலத்தையும் பெற்றுள்ளது.


கடலோர காவல்படையில் தற்போது 60 கப்பல்கள், 18 ரோந்து படகுகள், 52 சிறிய அளவிலான படகுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.