இனி இந்தியர் எவரும் ஜம்முகாஷ்மீர் லடாக்கில் நிலம் வாங்கலாம்...அரசின் நில சட்ட அறிவிக்கை..!!!
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ், ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில், இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் நிலங்கள் வாங்கலாம் என்பது குறித்து நில சட்டத்திற்கான அறிவிக்கையை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது
மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 370-வது பிரிவை ரத்து செய்ததன் மூலம் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
ஜம்மு-காஷ்மீர் (Jammu Kashmir) மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ், ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில், இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் நிலங்கள் வாங்கலாம் என்பது குறித்து நில சட்டத்திற்கான அறிவிக்கையை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆணை, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மூன்றாம் ஆணை, 2020 என்று அழைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிக்கை குறித்து கூறிய ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, `இந்த சட்டத்தின் மூலம் விவசாய நிலங்களை, வேறு விதமான பயன்பாட்டிற்காக முடியாது. அதேநேரத்தில், விவசாய நிலங்களில், கல்வி நிலையங்கள், சுகாதார அமைப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்தத் தடை இல்லை. அதற்காக விதிகள் திருத்தப்பட்டுள்ளன’ என்று கூறினார்.
மத்திய அரசின் இந்த சட்டம் மூலம் ஜம்மு காஷ்மீர் விற்பனைக்கு என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். அவர் ட்விட்டரில் தனது கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR