சீனாவில் கடும் உணவு நெருக்கடி, விவசாய நிலத்தை பிற நாடுகளில் குத்தகைக்கு எடுக்கும் நிலை..!!!

சீனா தனது நட்பு நாடான பாகிஸ்தானின் வளமான  பலுசிஸ்தானின் இயற்கை வளங்களை சுரண்டி வரும் நிலையில், இப்போது சீனா சிந்து மாகாணத்தில் உள்ள விவசாய நிலங்கள் மீது கண் வைத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 25, 2020, 04:59 PM IST
  • சீனா தனது நட்பு நாடான பாகிஸ்தானின் வளமான பலுசிஸ்தானின் இயற்கை வளங்களை சுரண்டி வரும் நிலையில், இப்போது சீனா சிந்துமாகாணத்தில் உள்ள விவசாய நிலங்கள் மீது கண் வைத்துள்ளது.
  • சீனாவில் இறக்குமதி அளவு ஏழு ஆண்டுகளில் அதிகபட்சமாக உள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் 9,10,000 டன் கோதுமையை இறக்குமதி செய்தது.
  • வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இருந்த பயிர்கள் அழிந்து விட்டன. இந்த வெள்ளம் சுமார் 6 கோடி மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது.
சீனாவில் கடும் உணவு நெருக்கடி, விவசாய நிலத்தை பிற நாடுகளில் குத்தகைக்கு எடுக்கும் நிலை..!!! title=

சீனா தற்போது பெரிய அளவில் உணவு நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுடன் மேற்கொண்ட உணவு ஒப்பந்தங்களை சீனா தொடர்ந்து ரத்து செய்து வருகிறது என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.  இதை அடுத்து சீனா  பெரிய அளவில் உணவு நெருக்கடியை சந்திக்கிறது என்று நம்பப்படுகிறது. 

இந்த ஆண்டு ஜூலை மாதம், சீனாவின் (China)  உணவு பொருட்கள் விலைகள் 13.2% அதிகரித்துள்ளது.  சீனாவில் அதிக அளவில் உட்கொள்ளப்படும் இறைச்சி முதல் தானியங்கள் அனைத்தி உணவு பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.  மிக அதிகம் உட்கொள்ளப்படும் பன்றி இறைச்சி விலை 86% அதிகரித்துள்ளது என்று தேசிய புள்ளிவிவர அமைப்பு தெரிவித்துள்ளது. சீனா உலகம் முழுவதிலுமிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது

இறக்குமதி,  74.51 மில்லியன் டன் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு முதல் பாதியில் நாடு அதன் தானிய இறக்குமதியை 22.7% அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சீனா மிகப்பெரிய சோயாபீன்ஸ் உற்பத்தியாளராக இருந்தபோதிலும், இந்த ஆண்டு 40 மில்லியன் டன் சோயாபீன்களை அதன் பரம எதிரியான அமெரிக்காவிலிருந்து (America) இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இதிலிருந்து 

சீனாவில் இறக்குமதி அளவு ஏழு ஆண்டுகளில் அதிகபட்சமாக உள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் 9,10,000 டன் கோதுமையை இறக்குமதி செய்தது. இது 197% அதிகம் என தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், இது 880,000 டன் மக்காசோளம், 680,000 டன் சோளம் மற்றும் 140,000 டன் சர்க்கரை ஆகியவற்றை சீனா இறக்குமதி செய்துள்ளது.

சீனாவில் விவசாயம் மிகவும் குறைந்து விட்டது என கூறப்படுகிறது.  இதனால் உற்பத்தி குறைந்து விட்டது.அதோடு யாங்சே பேசினில் ஏற்பட்ட  வெள்ளமும் சீனாவுக்கு பேரழிவாக மாறியுள்ளது. வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இருந்த பயிர்கள் அழிந்து விட்டன. இந்த வெள்ளம்  சுமார் 6 கோடி மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளதோடு1,50,000  கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. வெட்டுக்கிளி திரள் தாக்குதல்கள் மற்றும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் ஆகியவை நாட்டின் விவசாயத் துறையை பெரிதும் பாதித்துள்ளன. சீனாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பெரும்பாலான பன்றிகள் கொல்லப்பட்டிருப்பதால், அதிகம் அளவில் உற்பத்தி செய்யப்படும் இறைச்சி உற்பத்தியும் குறைந்துள்ளது.

ALSO READ | பண்டிகை காலத்தில் மக்கள் உள்ளூர் தயாரிப்புகளை வாங்கி ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் மோடி

சீனாவில்  பேரழிவை ஏற்படுத்தியுள்ள இயற்கையின் சீற்றத்தினால், விவசாய நிலங்களும் குறைந்து வருகிறது. சீனாவின் இயற்கை வள அமைச்சகம், வெளியிட்டுள்ள தரவில்,  சீனாவில் உள்ள சாகுபடி நிலம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக குறைந்து வருகிறது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டை விட 60,900 ஹெக்டேர் அளவிற்கு விவசாய நிலங்கள் குறைந்துள்ளன. உணவு நுகர்வுக்கும் உணவு உற்பத்திக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்காக, ஜிபூட்டி, நைஜீரியா, ஜிம்பாப்வே, சிலி, அர்ஜென்டினா, கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட பல ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் வளமான நிலங்களை சீனா வாங்கவும் குத்தகைக்கு எடுக்கவும் தொடங்கியுள்ளது. விவசாய நிலங்களை வெளிநாடுகளில் வாங்க சீனா சுமார் 94 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளது.

சீனா தனது நட்பு நாடான பாகிஸ்தானின் வளமான  பலுசிஸ்தானின் இயற்கை வளங்களை சுரண்டி வரும் நிலையில், இப்போது சீனா சிந்துமாகாணத்தில் உள்ள விவசாய நிலங்கள் மீது கண் வைத்துள்ளது.

பாகிஸ்தான் விவசாய நிலத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக, சீனா சமீபத்தில் பாகிஸ்தானுடனான விவசாய ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சீனா இப்போது பல ஆயிரம் ஏக்கர் பாகிஸ்தான் நிலத்தின் உரிமையை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் நாட்டில் அதிகரித்து வரும் உணவு நெருக்கடி குறித்து கவலை கொண்டுள்ளார். உணவு விரயம் செய்யக் கூடாது என பிரச்சாரம் செய்து வரும், ஜி ஜின்பிங் இப்போது இந்த நெருக்கடியை சமாளிக்க நிபுணர்களிடமிருந்து யோசனைகளை நாடுகிறார். உயர்மட்ட விஞ்ஞானிகள் மற்றும் வணிகர்களுடனான சமீபத்திய கருத்தரங்கில், ஜின்பிங் விவசாய நெருக்கடியை தீர்ப்பதற்கான சாத்தியமான வழிமுறைகளைப் பற்றி விவாதித்தார்.

ALSO READ | அமைதியை விரும்பும் அதேநேரத்தில், ஒரு அங்குல நிலத்தை கூட இந்தியா விட்டுத்தராது: Rajnath Singh

 

கொரோனா வைரஸ் காரணமாக சீன பொருளாதாரமும் மந்தமாகிவிட்டது. சந்தைகள் காலியாக உள்ளன, மக்கள் செலவிட தயாராக இல்லை. 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News