உள்ளூர், சர்வதேச விமானங்களில் உணவு பரிமாறலாம்: SOP அளித்தது மத்திய அரசு!!
மார்ச் 24 ம் தேதி விதிக்கப்பட்ட நாடு தழுவிய லாக்டௌனுக்குப் பிறகு மூன்று மாதங்களுக்கு வான்வெளி போக்குவரத்து மூடப்பட்டு விமான போக்குவரத்து முற்றிலுமாக நின்றது.
புதுடெல்லி: அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கும் விமானத்தில் உணவு பரிமாற மத்திய அரசு (Central Government) வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது. எனினும், வழங்கப்பட்ட வழிகாட்டுதலின் படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட சுகாதாரம் பராமரிக்கப்பட்டால் மட்டுமே விமானங்கள் உணவு அளிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஒரு புதிய SOP-ஐ வெளியிட்டது. விமான நிறுவனங்கள், உள்நாட்டு விமானங்களில் (Domestic Airlines) முன்பே பேக் செய்யப்பட்ட தின்பண்டங்கள், உணவு மற்றும் பானங்களை வழங்கலாம் என்றும் சர்வதேச விமானங்களில் (International Flights) விமானத்தின் கால அளவைப் பொறுத்து சூடான உணவை வழங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கேபின் குழுவினர் ஒவ்வொரு முறை உணவு வழங்கும் முன்னரும் புதிய கையுறைகளை பயன்படுத்த வேண்டும் என்று SOP-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகுப்புகளிலும், ட்ரே செட்-அப்புகள், தட்டுகள் மற்றும் கட்லரிகள் மீண்டும் பயன்படுத்தப்படாமல் முற்றிலுமாக களையப்பட வேண்டும் என்றும் சுத்தம் செய்யப்பட்ட மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட சுழற்சிகள் பயன்படுத்தப்படும் என்று உத்தரவு கூறுகிறது. மேலும், பயன்படுத்தப்பட்ட தட்டுகள், பரிமாறும் பாத்திரங்கள் ஆகியவை பயன்படுத்தப்படாது, பயன்படுத்தப்பட்ட சுழற்சிகள் மீண்டும் சுத்தம் செய்யப்படுவதற்கு முன்பு நன்கு சுத்திகரிக்கப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், விமான பொழுதுபோக்கு சேவைகளான திரைப்படத் திரைகளை இப்போது இயக்கலாம். எனினும், அனைத்து திரைகளும் (Screens) முழுமையாக சுத்தம் செய்யப்பட வேண்டும். பயணிகளுக்கு, கிருமி நீக்கம் செய்யப்பட்ட, ஒரு முறை பயன்பாட்டு ஹெட்ஃபோன்கள் வழங்கப்படலாம்.
நீண்ட தூர சர்வதேச விமானங்களிலும், தண்ணீர் பாட்டில்கள், பேக் செய்யப்பட்ட உணவு மற்றும் குளிர் மது அல்லாத பானங்கள் இருக்கைகளில் வைக்கப்பட்டன.
ALSO READ: Unlock 4.0: பள்ளி-கல்லூரி மற்றும் ரயில் சேவைகள் செப்டம்பர் 1 முதல் தொடங்கப்படுமா..?
விமான சேவைகள் நோய்த்தொற்றின் பரவலைத் தூண்டக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் மே மாதத்தில் மீண்டும் தொடங்கப்பட்டன. கடந்த மூன்று மாதங்களில், விமானங்கள் பாதுகாப்பான பயண முறையாக மாறிவிட்டன.
கொரோனா வைரஸ் (Corona Virus) ஒரு மேற்பரப்பில் பரவும் வைரஸ் என்பதால், விமான சேவையின் போது குறைந்தபட்ச மேற்பரப்பு தொடர்பு இருப்பதை உறுதி செய்வதே ஆரம்ப SOP –யாக இருந்தது.
மார்ச் 24 ம் தேதி விதிக்கப்பட்ட நாடு தழுவிய லாக்டௌனுக்குப் பிறகு மூன்று மாதங்களுக்கு வான்வெளி மூடப்பட்டு விமான போக்குவரத்து முற்றிலுமாக நின்றது. இதனால் விமானத் தொழில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்களில் உணவு மற்றும் பானங்களின் விற்பனை இந்த துறையின் லாபத்தை சற்று அதிகரிக்க வழிவகுக்கும்.
இதற்கிடையில், இந்தியாவில் வெள்ளிக்கிழமை மிகவும் அதிகமாக 77,266 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். 1,057 பேர் இறந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,87,501 ஆகியுள்ளது. இதில் 7,42,023 பேர் சிகிச்சையில் உள்ளனர். 25,83,948 குணமடைந்துள்ளனர். இதுவரை 61,529 பேர் இறந்துள்ளனர்.
ALSO READ: இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 33,87,501 ஆக உயர்ந்துள்ளது