இந்த கொடுமையான கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.  அதில் ஒரு பகுதியாக, சமூக பாதுகாப்பை வழங்குவது தொடர்பான விரிவான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலாளிக்கு கூடுதல் செலவு இல்லாமல் தொழிலாளர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவு ஆக்கப்பூர்வமானதாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


கொரோனாவால் இறக்கும் ஊழியரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச நன்மையான 6 லட்சம் ரூபாய் தற்போது 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 


Also Read | கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு PM Cares மூலம் பல நன்மைகள்


கோவிட் -19 தொற்றுநோயால் தங்கள் குடும்பத்தை பராமரிக்கும் (சம்பாதிக்கும்) உறுப்பினர்களை இழந்த தொழிலாளர்களுக்கு பெரும் நிவாரணம் தரும் செய்தியை   தொழிலாளர் அமைச்சகம் (Labour ministry) அறிவித்துள்ளது.


ESIC மற்றும் EPFO திட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வைப் உறுதி செய்வதற்கான அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை (மே 30, 2021) அன்று வெளியானது.


"வேலை தரும் முதலாளிக்கு கூடுதல் செலவு இல்லாமல் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்" என்று தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் பிரதானமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also Read | கொரோனாவினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி – தமிழக அரசு


தற்போதைய ESIC திட்டத்தின் இன் கீழ், காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு (Insured Persons (IPs)), பணியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் தொழிலாளி பெற்றுக் கொண்டிருந்த தினசரி ஊதியத்தில் 90% க்கு சமமான ஊதியம் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும்.


பணியாளர் இறந்துவிட்டால், பணியாளரின் வாழ்க்கைத் துணை மற்றும் விதவை தாய்க்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கொடுக்கப்பட வேண்டும். உயிரிழந்த பணியாளரின் குழந்தைகள் 25 வயதை அடையும் வரையும், பெண் குழந்தையாக இருந்தால், அவரது திருமணம் வரை ஓய்வூதிய நன்மைகளைப் பெறலாம்.


ESIC திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் (ஐபி) குடும்பங்களுக்கு ஒரு நிவாரணமாக, ஒரு பணியாளருக்கு கொரோனா நோய் இருப்பது கண்டறிவதற்கு முன்னதாக ESICஇன் ஆன்லைன் போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட, அனைத்து வாரிசுகளுக்கும் நன்மை வழங்கும் முடிவை அரசு எடுத்துள்ளது.


Also Read | AP Corona Relief Fund: கொரோனாவினால் இறப்பவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி


பணியின்போது காயமடைந்து வேலை செய்ய முடியாத நிலை ஏற்படும்போது, ஒரு ஊழியருக்கு கொடுக்கப்படும் அனைத்து நன்மைகளும், கொரோனாவால் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு கிடைக்கும். அதற்கான சில விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது.


உயிரிழப்பிற்கு காரணமான COVID நோய் இருப்பது சம்பந்தப்பட்ட ஊழியருக்கு இருப்பது கண்டறிவதற்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னதாக ESIC ஆன்லைன் (online portal) போர்ட்டலில் ஊழியர் தனது தரவுகளை பதிவேற்றியிருக்க வேண்டும்.


கொரோனா பாதிப்பு கண்டறியப்படுவதற்கு முந்தைய ஓராண்டில், குறிப்பிட்ட பணியாளர் குறைந்தபட்சம் 78 நாட்களுக்கு பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கான தொகை அவருக்கு செலுத்தப்பட்டிருந்தாலும் சரி, நிலுவையில் இருந்தாலும் சரி, ஆண்டில் 78 நாட்கள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம்.


Also Read | #metoo: சாஸ்த்ரா பல்கலைக்கழக பேராசியர் மீது முன்னாள் மாணவி பாலியல் தொல்லை புகார்


மேலே குறிப்பிட்ட தகுதி நிபந்தனைகளை பூர்த்திசெய்த கொரோனா நோயாளிகள் இறந்தால், அவரை சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு மாத ஓய்வூதியம் பெற தகுதி உண்டு. காப்பீடு செய்யப்பட்ட நபரின் சராசரி தினசரி ஊதியத்தில் 90% அவர்களின் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். குழந்தைகளுக்கு அவர்களின் 25 வயது வரையில் பயன் கிடைக்கும். இந்த திட்டம் 24.03.2020 முதல் இரண்டு வருட காலத்திற்கு மட்டும் நடைமுறையில் இருக்கும். அதாவது, இந்த இரண்டாண்டு காலத்தில் உயிரிழக்கும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு அரசு இன்று அறிவித்திருக்கும் திட்டம் பலனளிக்கும்.


EPFO இன் ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இந்தத் திட்டத்தின் உறுப்பினர்களின் எஞ்சியிருக்கும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் EDLI இன் நன்மைகளைப் பெற தகுதியுடையவர்கள்.


ஒரு தொழிலாளி இறந்தால், அவர் பணிக்கொடை (Gratuity) விதிகளின் படி வழக்கமாக கூறப்படும் குறைந்தபட்ச காலம் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஈபிஎஃப் மற்றும் எம்.பி. சட்டத்தின் (EPF & MP Act) கீழ் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.


Also Read | கோவிட் நிவாரணப் பொருட்களை தமிழக அரசுக்கு வழங்கிய Isha Foundation


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR