AP Corona Relief Fund: கொரோனாவினால் இறப்பவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி

நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் சற்றுக் குறையத் தொடங்கியிருக்கிறது. ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் அவலநிலையும் மனதை வேதனை கொள்ள வைக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 18, 2021, 04:15 PM IST
  • கொரோனாவினால் இறப்பவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி
  • கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குக்கு தலா 15 ஆயிரம் ரூபாய்
  • ஆந்திராவில் கொரோனா பாதிப்பு 14 லட்சத்திற்கும் அதிகம்
AP Corona Relief Fund: கொரோனாவினால் இறப்பவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி  title=

நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் சற்றுக் குறையத் தொடங்கியிருக்கிறது. ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் அவலநிலையும் மனதை வேதனை கொள்ள வைக்கிறது.

இதுதொடர்பாக, மாநில அரசுகள், தாங்கள் மக்களுக்கு தேவையான உதவிகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், ஆந்திராவில் கொரோனா தொற்றில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

மாநில முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி இதனை அறிவித்தார்.

Also Read | Coronavirus Updates 18 May 2021: கடந்த 24 மணி நேரத்தில் 2.63 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

பெற்றோரை இழந்து தவிக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்யப்படும் என ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆந்திராவில் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்து தவிக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய நிவாரணமாக உள்ளது. இதுவரை இதுபோன்ற அறிவிப்பை எந்தவொரு மாநிலமும் வெளியிடவில்லை. 

ஆந்திர பிரதேசத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்தை கடந்துள்ளது. 11 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Also Read | Cyclone Tauktae; டக் தே சூறாவளியின் கோரத் தாண்டவம் புகைப்படங்களில்..  

2 லட்சத்து 10 ஆயிரத்து 436 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கொரோனா பாதிப்புக்கு இதுவரை 9 ஆயிரத்து 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்கவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான ஆணை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல், கொரோனா தொற்றுக்கு பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

Also Read | History Today: வரலாற்றின் பொன்னேடுகளில் May 18; முக்கியத்துவம் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News