New CDS: பிபின் ராவத்தின் பதவி யாருக்கு? முப்படைகளின் புதிய தலைமைத் தளபதி நியமனம்
ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத்தின் திடீர் மறைவுக்குப் பிறகு, முப்படைகளின் புதிய தலைமைத் தளபதி யார் என்ற விவாதம் எழுந்துள்ளது
புதுடெல்லி: தமிழகத்தின் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தளபதி பிபின் ராவத் திடீரென காலமானதால், முப்படைகளின் தலைமைத் தளபதியாக அடுத்து பதவி வகிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பதவியை நீண்ட காலத்திற்கு காலியாக வைத்திருக்க முடியாது என்பதால், விரைவில் புதிய முப்படைகளின் தலைமைத் தளபதி (chief defence staff (CDS)) நியமிக்க அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. அடுத்த ஏழு முதல் பத்து நாட்களில் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவி நிரப்பப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விதிகளின்படி, ஆயுதப்படைகளின் எந்த கட்டளை அதிகாரிகளும் அல்லது கொடி அதிகாரிகளும் (Commanding officers or flag officers of the armed forces) இந்த பதவிக்கு தகுதியானவர்கள்.
இந்த பதவி உருவாக்கப்பட்ட பிறகு முதன்முதலில் நியமிக்கப்பட்டவர் ஜெனரல் பிபின் ராவத் (General Bipin Rawat) என்பதால், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியை நியமிப்பதில் எந்த முன்னுதாரணமும் இல்லை என்பதால், முக்கிய நியமனம் செய்வதற்கு முன் அரசாங்கம் சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். அரசு மேற்கொள்ளும் நியமனங்களில் முன்னுதாரணமானது மிகவும் முக்கியமானது. அதுமட்டுமல்லாமல், அடுத்த CDS ஆக ஒரு புதிய அதிகாரியை நியமிக்கும்போது பல அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஜெனரல் பிபின் ராவத் டிசம்பர் 31, 2016 அன்று 26வது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். லெப்டினன்ட் ஜெனரல்கள் பிரவீன் பக்ஷி மற்றும் PM ஹரிஸ் என இந்திய ராணுவத்தின் இரு அதிகாரிகளுக்கு அடுத்து பட்டியலில் இருந்தவர்களைத் தவிர்த்து முப்படைகளின் தலைமைத் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டது அசாதாரணமானது. ஆனால் அசாதாரணமான நியமனங்களைச் செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ | குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: அவசர மத்திய அமைச்சரவை கூட்டம்!
CDS ஆக தகுதியுடைய அதிகாரிகள் நான்கு நட்சத்திர ஜெனரல் அல்லது இந்திய விமானப்படையின் Air Chief Marshal மற்றும் இந்திய கடற்படையின் அட்மிரல் (Admiral) பதவிகளுக்கு சமமான பொறுப்புகளில் இருக்க வேண்டும். அதோடு, இந்திய ராணுவம், இந்திய விமானப்படை அல்லது இந்திய கடற்படையில் மூன்று நட்சத்திர அதிகாரியாக இருப்பவரும், முப்படை தலைமைத் தளபதியாக நியமிக்கப்படலாம், ஆனால் அந்தந்த சேவைகளில் நான்கு நட்சத்திர அதிகாரியாக ஆவதற்கு தகுதியுடையவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை தளபதிகள் மூவருமே இந்தப் பதவிக்கு தகுதியுடையவர்கள் ஆவர்கள்.
ஜெனரல் ராவத் தனது பரந்த ராணுவ அனுபவத்தின் அடிப்படையில் CDS ஆக நியமிக்கப்பட்டாலும், அவரது நிபுணத்துவம் மற்றும் அரசியல் கூர்மை ஆகியவை அனைவராலும் பாராட்டப்படுவது. எனவே அவற்றின் அடிப்படையில் தகுதியான எந்த அதிகாரியையும் அரசாங்கம் தேர்வு செய்யலாம்.
ஜெனரல் பிபின் ராவத் மற்றும் பிற பாதுகாப்புப் பணியாளர்கள் உயிரிழந்ததற்கு காரணமான ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Security (CCS)) புதன்கிழமை கூடியது. அதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா மற்றும் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர், இதில் CCS உறுப்பினர்களுக்கு துயர சம்பவம் குறித்து விளக்கப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் புதிய CDS நியமனம் குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
ALSO READ | பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் குறித்த முழுத் தகவல்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR