தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) வெள்ளிக்கிழமை தனது மையத் தலைவர் சரத் பவாரின் புது டெல்லி இல்லத்தில் பாதுகாப்பை வாபஸ் பெற்றதையடுத்து, இந்த விவகாரத்தில் அரசியல் புயலைத் தூண்டியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவாரின் அதிகாரபூர்வமான வசிப்பிடமான டெல்லி ஜனபத் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு அளிக்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு திடீரென்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. கிடைக்கெப்பெற்ற தகவல்கள்படி கடந்த ஜனவரி  20-ஆம் தேதி வரை அங்கு பாதுகாவலுக்கு காவல்துறை வந்தனர். பின்னர் காவல்துறையினர் காவலுக்கு வரவில்லை.


ஜனவரி 20-ஆம் தேதியிலிருந்து பாதுகாப்பு வாபஸ் பெறப்படுவதாக முன்கூட்டியே தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.


இந்த நடவடிக்கையானது பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் மகாராஷ்டிர அரசு சிறுபான்மையோர் துறை அமைச்சராக பணி புரியும் நவாப் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.


மேலும், இத்தகைய அச்சுறுத்தும் செயல்களுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பயப்பட மாட்டார்கள் என மாலிக் குறிப்பிட்டுள்ளார்.


சரத் பவார் இல்லத்துக்கான பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றிருப்பதை மகாராஷ்டிரா அமைச்சரவையில் உள்ள மற்ற தலைவர்களும் கடுமையாக சாடியுள்ளனர்.


இந்நிலையில் இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவிக்கையில்.,  "இது அதிர்ச்சியளிக்கிறது? அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் மற்றும் கடந்த காலங்களில் தாக்கப்பட்ட ஒரு மூத்த தலைவர் சரத் பவார் என்பதை பிரதமர் அறிந்திருக்கிறார். இதற்கு நாங்கள் சாட்சியம் அளித்துள்ளோம். இந்நிலையில் அவரது பாதுகாப்பினை பின்வாங்கி இருப்பது கண்டனத்திற்குறியது" என்று குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் பாதுகாப்பை மத்திய அரசு பின்வாங்கியது. இந்நிலையில் தற்போது சரத் பவாரின் இல்லத்தில் இருந்த பாதுகாப்பை பின்வாங்கியுள்ளது என்றும் இது மிகவும் கவலையாக உள்ளது என்றும் ரவுத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.