Pensioners Latest News: மத்திய அரசு ஓய்வூதியதாரரா நீங்கள்? உங்கள் வீட்டில் மத்திய அரசு பணியாளர்களோ அல்லது ஓய்வூதியதாரர்களோ உள்ளார்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்திர மருத்துவ உதவித்தொகை குறித்து ஒரு முக்கிய புதுப்பிப்பு வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் (MoHFW), நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், CGHS வசதிகளைப் பெறாத ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்திர மருத்துவ உதவித்தொகையை அதிகரிக்கும் திட்டம் அரசுக்கு உள்ளதா என்று கெள்வி எழுப்பினார். அப்படி இருந்தால், அதன் விவரங்களை வழங்குமாறும் அவர் கூறினார்.


CGHS வசதிகளைப் பெறாத ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்திர மருத்துவ உதவித்தொகையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று டி.ஆர்.பாலு கேட்டார். அத்தகைய முன்மொழிவு ஏதேனும் இருந்தால், ஓய்வுபெற்ற ஊழியர்களின் மருத்துவத் தேவைகளை தற்போதுள்ள உதவித்தொகையுடன் பூர்த்தி செய்துகொள்ள அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.


 Central Government Health Scheme 


இதற்கு பதிலளித்த சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW), மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் வராத பகுதிகளில் வசிக்கும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு FMA எனப்படும் நிலையான மருத்துவ உதவித்தொகையை (Fixed Medical Allowance) உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.


மக்களவை அமர்வின் போது, ​​எம்.பி., பாலு கேட்ட கேள்விக்கு, டிசம்பர் 6, 2024 அன்று, நாடாளுமன்றத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் இந்த அறிக்கையை வெளியிட்டார்.


Central Pay Commission: மத்திய ஊதியக் குழுவின் கீழ் தற்போதைய நிலையான மருத்துவ உதவித்தொகை எவ்வளவு?


- தற்போது, ​​எஃப்எம்ஏ மாதத்திற்கு ரூ 1,000 ஆக உள்ளது. 
- இது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கடைசியாக திருத்தப்பட்டது. 
- ஓய்வூதியம் பெறுவோர் அவர்களின் அன்றாட மருத்துவச் செலவுகளைச் சமாளிக்கும் வகையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | EPFO புத்தாண்டு பரிசு: சுலபமாகும் செயல்முறை, ATM மூலம் உடனடியாக பிஎஃப் பணம் கிடைக்கும்


Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பு


சிஜிஹெச்எஸ் அல்லாத பகுதிகளில் வசிக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்புக்கு பல விருப்பங்கள் இருப்பதாக அரசாங்கம் கூறியது. அவர்கள் CGHS இன் கீழ் OPD வசதிகளுக்குப் பதிலாக FMA -ஐத் தேர்வு செய்யலாம் அல்லது தேவையான சந்தாவைச் செலுத்தி விரிவான OPD மற்றும் IPD நன்மைகளுக்காக அருகிலுள்ள CGHS -ஐ உள்ளடக்கிய நகரத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என அரசாங்கம் விளக்கியது. கூடுதலாக, ஓய்வூதியம் பெறுவோர் OPD சிகிச்சைக்கான FMA மற்றும் உள்நோயாளிகளுக்கான CGHS ஆகியவற்றைப் பெற்று இரண்டு நன்மைகளையும் இணைக்கலாம்.


“CGHS அல்லாத பகுதிகளில் வசிக்கும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் பின்வரும் விருப்பங்கள் உள்ளன: அவர்கள் CGHS இன் கீழ் OPD வசதிகளுக்குப் பதிலாக நிலையான மருத்துவ உதவித்தொகையை (FMA) பெறலாம். தேவையான சந்தாவை செலுத்திய பிறகு, அருகிலுள்ள CGHS க்கு உட்பட்ட நகரத்தில் தங்களைப் பதிவு செய்துகொண்டு அவர்கள் CGHS (OPD & IPD) இன் பலன்களைப் பெறலாம்,” என்று அமைச்சர் கூறினார்.


மருத்துவத் தேவைகளுக்கான அடிப்படை ஆதரவை வழங்குவதற்காக FMA வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியது. எனினும், இதை மேலும் மேம்படுத்துவதற்கான எந்த வித உடனடித் திட்டங்கள் பற்றியும் அரசு குறிப்பிடவில்லை.


மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: 8வது ஊதியக் குழுவுக்கு பதில் இனி ஒவ்வொரு ஆண்டும் சம்பள திருத்தமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ