இந்த மத்திய ஊழியர்களுக்கு நற்செய்தி: கிராஜுவிட்டி வரம்பு உயர்த்தப்பட்டது, புதிய வரம்பு என்ன?

7th Pay Commission: பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் எம்டிஎன்எல் (MTNL) ஊழியர்களுக்கு அதிகபட்ச பணிக்கொடை வரம்பை (Maximum Gratuity limit) ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக அரசு உயர்த்தியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 18, 2024, 12:09 PM IST
  • எந்த ஊழியர்களுக்கு பணிக்கொடை அதிகரித்துள்ளது?
  • ஓய்வூதியதாரர்களுக்கு இதனால் ஏற்படவுள்ள மாற்றங்கள் என்ன?
  • இந்த மாற்றம் எந்த ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கு பொருந்தும்?
இந்த மத்திய ஊழியர்களுக்கு நற்செய்தி: கிராஜுவிட்டி வரம்பு உயர்த்தப்பட்டது, புதிய வரம்பு என்ன?

7th Pay Commission Latest Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழிச்சியான செய்தி. கூட்டுப் பணியின் கீழ் ஓய்வூதியம் பெறும் பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் எம்டிஎன்எல் (MTNL) ஊழியர்களுக்கு அதிகபட்ச பணிக்கொடை வரம்பை (Maximum Gratuity limit) ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக அரசு உயர்த்தியுள்ளது. இது ஊழியர்களுக்கு பெரும் நிவாரணத்தை அளித்துள்ளது. உயர்த்தப்பட்ட கிராஜுவிட்டி வரம்பு ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வரும். 

Add Zee News as a Preferred Source

ஜனவரியில் 2024 -இல் அகவிலைப்படி 50% -ஐ எட்டியதை அடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகரித்த பணிக்கொடை வரம்பு ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gratuity Limit: பணிக்கொடை வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டது

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை (DoPPW) மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதத்தை எட்டிய பிறகு, மே 30 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதில் பணிக்கொடை வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் என்றும், இந்த பணிக்கொடை வரம்பு ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

Central Government Employees: விதிகள் கூறுவது என்ன?

விதிகளின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ அடிப்படை சம்பளத்தில் 50% அடையும் போது, ​​அனைத்து கொடுப்பனவுகளும் 25% திருத்தப்படும். இந்த விதிகளின்படி, பல கொடுப்பனவுகளின் அதிகரிப்புடன், ஓய்வுபெறும் போது கிடைக்கும் பணிக்கொடை (Retirement Gratuity) வரம்பிலும் மத்திய அரசு மாற்றங்களை அறிவித்தது.

எந்த ஊழியர்களுக்கு பணிக்கொடை அதிகரித்துள்ளது?

சிசிஎஸ் (ஓய்வூதியம்) விதிகள் 2021-ன்படி ஓய்வூதியம் நிர்வகிக்கப்படும், ஒருங்கிணைந்த சேவை ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுத்துள்ள பிஎஸ்என்எல்/எம்டிஎன்எல் ஊழியர்களுக்கான பணிக்கொடை உச்சவரம்பை தொலைத்தொடர்புத் துறை, தகவல் தொடர்பு அமைச்சகம் ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தியுள்ளது.

மேலும் படிக்க | சூப்பர் செய்தி!! குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிப்பது உறுதி: நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரை

Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு இதனால் ஏற்படவுள்ள மாற்றங்கள் என்ன?

கிராஜுவிட்டி வரம்பு அதிகரித்துள்ளது. CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021ன் விதி 37ன் கீழ் ஓய்வூதியம் பெறும் BSNL மற்றும் MTNL ஊழியர்களுக்கு இறப்பு மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவின் (DCRG) அதிகரித்த வரம்பு பயனளிக்கும். புதிய வரம்பு ஜனவரி 1, 2024க்குப் பிறகு செய்யப்படும் பணிக்கொடைத் தொகைகளுக்குப் பொருந்தும்.

ஓய்வூதிய கணக்கீட்டில் மாற்றம் இருக்காது: ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கு தற்போதுள்ள ஃபார்முலாவில் எந்த மாற்றமும் இல்லை. இதன் பொருள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஏற்கனவே நிறுவப்பட்ட முறையின்படி ஓய்வூதியத்தைப் பெறுவார்கள்.

கம்யூட்டேஷன் ஏற்பாட்டில் மாற்றம் இல்லை: ஓய்வூதியத்திற்கான (Pension) கம்யூட்டேஷன் விதிகள் அப்படியே இருக்கும். இதன் காரணமாக கம்யூட்டேஷன் மதிப்பு அல்லது கணக்கீட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது.

இந்த மாற்றம் எந்த ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கு பொருந்தும்?

இந்த மாற்றம் BSNL/MTNL ஊழியர்களின் ஒருங்கிணைந்த சேவையின் அடிப்படையில் ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுத்துள்ளவர்களின் பணிக்கொடையில் தாக்கத்தை ஏற்படுத்தும். பணவீக்கம் அதிகரித்து வரும் இந்த சூழலில், புதிய மாற்றம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நிதி நிவாரணத்தை அளித்துள்ளது. இந்த நடவடிக்கையானது ஊழியர்களின் முன்னேற்றத்திற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது என்று கூறினால் அது மிகையாகாது.

மேலும் படிக்க | புதுமண ஜோடிகளே... வாழ்க்கையில் பணப் பிரச்னை வராமல் இருக்க... இதை கண்டிப்பாக படிங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News