ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொறுப்பு) பிரவீன் குமாரை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவு பிரப்பித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திராவுக்கு தனி உயர்நீதிமன்றம் அமைக்க குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது தலைமை நீதிபதி நியமனம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 


கடந்த 2014 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர் இரு மாநிலங்களுக்கும் பொதுவாக ஐதராபாத் நகரில் ஆந்திரா, தெலுங்கானா உயர் நீதிமன்றம் இயங்கி வருகிறது.


முன்னர் ஆந்திராவின் தலைநகரமாக இருந்த ஐதராபாத் நகரம் தெலுங்கானா மாநிலத்துக்கு சொந்தமாகிப்போன நிலையில், ஆந்திரா மாநிலத்திற்கென புதிய தலைநகரமாக அமராவதி நகரம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதேவேலையில் ஆந்திரா மாநிலத்துக்கென தனியாக புதிய உயர் நீதிமன்றம் அமைக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.


இந்நிலையில், மத்திய அரசின் இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பின்படி ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து அமராவதியில் புதிதாக இந்தியாவின் 25-வது உயர் நீதிமன்றமான ஆந்திரா உயர்நீதிமன்றம் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் 15 நீதிபதிகள் இங்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்நிலையில் தற்போது இந்த புதிய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) பிரவீன் குமாரை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவு பிரப்பித்துள்ளார்.