சண்டிகரில் திடீர் தீ விபத்து: மக்கள் அச்சம்!
சண்டிகரில் உள்ள சிவில் செயலகம் ஒன்றில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்தியாவில் உள்ள ஒரு நகரமான சண்டிகரின், ஹரியானா நகர் அருகே சிவில் செயலகம் ஒன்று உள்ளது. அந்த செயலகத்தின் இரண்டாவது மாடியில் தற்போது தீடிரென ஏற்பட்ட தீ விபத்தில் செயலகம் தீப்பிடித்துள்ளன.
தொடர்ந்து புகை வெளியேறிக்கொண்டிருப்பதால், தீ விபத்து ஏற்பட்டுள்ள சிவில் செயலகம் அமைந்துள்ள பகுதி அபாயகரமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
தற்போது வரை இந்த தீ விபத்தில் எவ்வித உயிரிழந்போ, காயமோ யாருக்கும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.