Chandrababu Naidu Escaped Narrowly From Train: ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாகவே பல்வேறு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக, தெலங்கானாவில் கம்மம் மாவட்டத்திலும், ஆந்திராவின் விஜயவாடா மாவட்டத்திலும் வெள்ள பாதிப்புகள் கடுமையாக ஏற்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல்லாயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் சிக்கியவர்களுக்கு குடிநீர் விநியோகம், உணவுப் பொருள்கள் விநியோகம் ஆகியவை அரசு தரப்பாலும், தன்னார்வ அமைப்பினராலும் செய்யப்பட்டு வருகிறது. இதனை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. 


விஜயவாடாவில் சந்திராபு ஆய்வு


இதை தொடர்ந்து, ஆந்திராவின் விஜயவாடாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அம்மாநில முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், விஜயவாடாவில் இன்றும் அவர் சில பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மதுராநகர் அருகே உள்ள ரயில் தண்டவாளம் செல்லும் ஆற்றுப் பாலம் ஒன்றில் நின்றுகொண்டிருந்தபோது, கண்ணசைக்கும் நேரத்தில் டக்கென ஒரு ரயில் அவரை கடந்து சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ரயிலில் இருந்து நூலிழையில் சந்திரபாபு நாயுடு தப்பித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


மேலும் படிக்க | தெலங்கானாவில் கனமழை - வெள்ளம்... அந்தரத்தில் தொங்கிய தண்டவாளம்வில் கனமழை-வெள்ளம்... அந்தரத்தில் தொங்கிய தண்டவாளம்


அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்ட பின்னரே அவர் தண்டவாளத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது டக்கென ரயில் அவரை கடந்து சென்றுள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் கடும் பதற்றம் ஏற்பட்டதாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, ரயில் பாலத்தை சந்திரபாபு நாயுடு பார்வையிட்டு வந்தபோது, அதில் ரயில் வருவது தெரிந்துள்ளது. 


நடந்தது என்ன?


பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இதை தெரிந்துகொண்டு உடனே அங்கிருந்து நகர்ந்து செல்லும்படி தெரிவித்துள்ளார். உடனே தெலுங்கு தேச கட்சியின் தொண்டர்களின் கூச்சலை தொடர்ந்து இதுகுறித்து லைன்மேனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், லைன் மேன் சிவப்பு கொடி காட்ட ரயிலின் வேகம் உடனே குறைக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் சந்திரபாபு நாயுடு இதுகுறித்து அறிந்திருந்தாலும் கூட, பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் அவர் உடனே தண்டவாளத்தில் இருந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது. 



மத்திய குழு ஆய்வு


நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. அவர் தொடர்ந்து, நிவாரணப் பணிகளையும், மீட்புப் பணிகளையும் மேற்பார்வையிட்டார். ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுள்ளது. சஞ்சீவ் குமார் ஜிண்டால் தலைமையிலான குழுவினர் விஜயவாடாவுக்கு வருகை தந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட, சேதங்கள் குறித்து மதிப்பீட்டை மேற்கொண்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


கடுமையான குடிநீர் தட்டுப்பாடு


வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், மாநாகராட்சியால் விநியோகிக்கப்படும் குடிநீரால் கூட நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. வெள்ளம் காரணமாக குடிநீரில் வண்டல் மண் அதிகம் கலந்திருக்கும் என்பதால் நோய் தாக்கும் அபாயம் அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


எனவே, குடிநீர் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து நேற்று பேசிய சந்திரபாபு நாயுடு,"வரலாறு காணாத வெள்ளம் காரணமாக குடிநீர் சேறும் சகதியுமாக இருக்கிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு, மாநகராட்சியால் வழங்கப்படும் தண்ணீரை இரண்டு நாட்களுக்குப் பயன்படுத்த வேண்டாம். அதில் தகுந்த சோதனைகளை மேற்கொண்ட பிறகு அதிகாரிகள் மக்களுக்குத் தகவல் தெரிவிப்பார்கள். இருப்பினும், அந்த தண்ணீரை குளிப்பதற்குப் பயன்படுத்தப்படலாம்" என்றார். 


மேலும் படிக்க | தெலங்கானாவில் தொடர் கனமழையால் வீடு இடிந்து விழுந்து விபத்து: தாய், மகள் பரிதாப பலி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ