சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்கியதும், இந்தியா நிலவை சொந்தம் கொண்டாட முடியுமா? நிலவில் இதுவரை தரையிறங்கிய நாடுகள் எவை? நிலவை சொந்தமாக்குவது சாத்தியமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக நிலவை சென்றடைந்து இன்று மாலை நிலவில் தரையிறங்கவும் உள்ளது. வெற்றிகரமாக சந்திரயான் 3 தரையிறங்கினால் அது இந்தியாவுக்கு வரலாற்று சாதனையாக அமையும் என்பதால், ஒட்டு மொத்த தேசமும் இந்த நிகழ்வை காண காத்திருக்கின்றனர். 


இந்த சூழலில் நிலவில் தரையிறங்கும் நாடுகள் நிலவை சொந்தம் கொண்டாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் வெளிப்புற விண்வெளி ஒப்பந்தப்படி அது சாத்தியமில்லை. 1967-ல் இந்தியா உள்பட 100 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. நிலா என்பது பொதுவானது என அப்போது முடிவெடுக்கப்பட்டது. எந்த நாடு வேண்டுமானாலும் நிலவுக்கு விண்கலம் அனுப்பி சோதனை செய்யலாம். ஆனால் அங்கு கொடி நட்டு இந்த இடம் எங்களுக்கு என உரிமை கோர முடியாது. 


மேலும் படிக்க | சந்திரயான்-3: கை குலுக்க காத்திருக்கும் நிலவும் விக்ரம் லேண்டரும்.. இவற்றை தெரிந்துகொள்ளுங்கள்!!


ஆனால் சர்வசேத சட்டம் என்பது 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும். அந்த வகையில், 2017-ம் ஆண்டு இதுதொடர்பாக 100 நாடுகளுடன் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி அங்கீகரிக்கப்படாமல் உள்ளது. ஒருவேளை புதிதாக சட்டம் மாற்றப்படலாம் எனவும் பேசப்படுகிறது. இதுவரை நிலவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தான் தரையிறங்கி உள்ளன. அதனால் அந்த நாடுகள் புதிய சட்டத்தை மாற்றி நிலவில் உரிமை கோரலாம். அதனால் தான் பல நாடுகளும் போட்டி போட்டு தற்போது நிலவில் தரையிறங்க ஆர்வம் காட்டி வருகிறது. நிலவில் களமிறங்குவது ஒரு நாட்டின் பெருமை என்றாலும், அதைத் தாண்டி இதில் சர்வதேச அரசியலும் அடங்கியுள்ளது என்கின்றனர் வல்லுநர்கள். 


சந்திரயான் 3-யும் நிலவில் தரையிறங்கினால் நான்காவது நாடாக நிலவில் தரையிறங்கிய பெருமையை பெரும். அதோடு தென் துருவத்தில் களமிறங்கிய முதல் நாடு என்ற வரலாற்று சிறப்பையும் இந்தியா பெரும். சர்வதேச சட்டத்தில் மாற்றம் வந்தால், நிலவில் இந்தியாவுக்கும் பங்கு கிடைக்கலாம்.


மேலும் படிக்க | சாதனை படைக்க நிலவில் தரையிறங்கும் சந்திரயான் - 3... நாடு முழுவதிலும் பிரார்த்தனைகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ