பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. இது தொடர்பான அப்டேட்டை மாலை 5.20 மணியில் இருந்து இஸ்ரோ நேரலை தகவல்களை வழங்கியது. நிலவின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வை மேற்கொள்ள கடந்த மாதம் 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், அடுத்தடுத்த சுற்றுப் பயண பாதை மாற்றங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் தொடர்ச்சியாக, குறைந்தபட்ச சுற்று வட்டப்பாதை 25 கிலோ மீட்டராக அண்மையில் குறைக்கப்பட்டு, நிலவை நெருங்கியது விக்ரம் லேண்டர். மேலும், நிலவில் எந்த பகுதியில் விக்ரம் லேண்டரை தரையிறக்குவது என்பதை ஆராய பொருத்தப்பட்ட அதிநவீன கேமிரா, கடந்த 19ஆம் தேதி புதிய புகைப்படங்களை எடுத்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த 15 ஆம் தேதி லேண்டர் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறியும் LPD கேமரா எடுத்த புகைப்படங்களையும் கடந்த 17 ஆம் தேதி உந்துவிசை கருவியில் இருந்து பிரிந்த போது லேண்டர் கேமரா எடுத்த புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டிருந்தது.


மேலும் படிக்க | சந்திரயான் நிலவில் தரையிறங்கினால் சொந்தம் கொண்டாட முடியுமா? சர்வதேச சட்டம் சொல்வது என்ன?


நிலவில் கால் பதிக்கும் சந்திரயான்-3:



 



நிலவில் கால் பதித்தது சந்திரயான்-3:


இந்நிலையில் தற்போது சற்று முன் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் சற்று முன் வெளியாகி வைரலாகி வருகின்றது.




நிலவில் பாரதம்- இஸ்ரோ தலைவர் சோமநாத் பெருமிதம்



இந்நிலையில் இஸ்ரோ திட்டமிட்டபடி 2023, ஆகஸ்ட் 23 இந்திய நேரப்படி சரியாக மாலை 6:04 மணிக்கு விக்ரம் லேண்டர் கலனை நிலவில் இறக்கியது. இதன் மூலம் நிலவில் ஆய்வு செய்யும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக இந்தியா இடம்பெற்றுள்ளது. எனினும், நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கிய உலகின் ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை இஸ்ரோ யூ டியூப் சேனலில் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் நேரலையில் பார்த்தனர்.


நிலவின் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்கிய பிறகு, விக்ரமின் ஒரு பக்க பேனல் விரிவடையும், பிரக்யான் ரோவர் வெளியே வருவதற்கு ஒரு சரிவை உருவாக்கும். பிரக்யானின் சக்கரங்கள் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோவின் லோகோவுடன் பொறிக்கப்பட்டுள்ளன. விக்ரமின் வயிற்றுப் பகுதியில் இருந்து பிரக்யான் வெளியே வந்து.. லேண்டரில் இருக்கும் பேனல் வழியாக சரிந்து ரோவர் வெளியே வரும். இதனால் பிரக்யான் உருளும் போது, ​​சந்திர மேற்பரப்பில் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோ லோகோவின் முத்திரைகளை பதித்து , இந்தியாவின் அடையாளத்தை உருவாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | சந்திரயான்-3: கை குலுக்க காத்திருக்கும் நிலவும் விக்ரம் லேண்டரும்.. இவற்றை தெரிந்துகொள்ளுங்கள்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ