12:31 12-06-2018
ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஐபிசி 499 மற்றும் 500 பிரிவின் கீழ் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் ராகுல் காந்தி தான் குற்றவாளி இல்லை என்று வாதிட்டார். 




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

12:00 12-06-2018
ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக மாஜிஸ்திரேட் கோர்ட்டிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் வருகை புரிந்துள்ளார்!




கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் நடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மகாத்மா காந்தி கொலைக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தொடர்பிருப்பதாக பேசினார்.


இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் தானே மாவட்டம் பிவண்டியில் உள்ள கோர்ட்டில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, கடந்த மே 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ராகுல் ஜூன் 12-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார். 


இந்நிலையில் கோரேகாவ் பகுதியில் உள்ள கண்காட்சி மையத்தில் நடக்கும் கட்சிக்கூட்டத்தில் கலந்து கொள்ள ராகுல்காந்தி இன்று மும்பைக்கு வருகை தரவிருக்கிறார். இதனிடையே ஆர் எஸ் எஸ் அமைப்பினர் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக ராகுல் இன்று நேரில்ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.