வார நாட்களில் விடுப்பு எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் உத்தரவு..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், வார நாட்களில் விடுப்பு எடுக்கக்கூடாது என நீதிபதிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கியிருப்பதால் இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் சுமார் 55,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன.


இதே போல 24 மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் சுமார் 32 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன. மாவட்ட நீதிமன்றங்களிலும் இரண்டரை கோடிக்கு மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.


இத்தகைய பணிச்சுமையில் நீதித்துறை இருப்பதால் வார நாட்களில் விடுமுறை எடுக்க வேண்டாம் என நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் உத்தரவிட்டுள்ளார். விடுப்பு எடுக்கும் நீதிபதிகளிடமிருந்து வழக்குகள் தொடர்பான கோப்புகளை எடுத்துவிடுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.