புதுடெல்லி: சி.ஜே.ஐ (CJI) அலுவலகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வர வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து மனு மீதனா விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்பொழுது சில நிபந்தனைகளுடன், தகவல் அறியும் உரிமை (Right to Information Act) கீழ் இந்திய தலைமை நீதிபதி துறை வரும் என்று உச்ச நீதிமன்றம் (Supreme Court) இன்று தெரிவித்துள்ளது. சி.ஜே.ஐ (Chief Justice of India) அலுவலகம் ஒரு பொது அலுவலகம் என்று நீதிமன்றம் கூறியது. அதனால் இந்த துறை தகவல் அறியும் உரிமையின் கீழ் வருகிறது. ஆர்.டி.ஐ கீழ் சி.ஜே.ஐ அமைப்பு வரும் என்ற 2010 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற அளித்த தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச், இன்று ஒரு வரலாற்று தீர்ப்பை ​​சில நிபந்தனைகளுடன் வழங்கி உள்ளது. இந்திய தலைமை நீதிபதி தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) கீழ் வரும் என்று கூறினார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் இந்த முடிவை வழங்கியுள்ளது. தகவல்களை வழங்குவது நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்காது. ஆனால் சில தகவல்களின் தனியுரிமை மற்றும் ரகசியத்தன்மை குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


ஏற்கனவே அயோத்தி வழக்கு (Ayodhya Case) மற்றும் இன்று கர்நாடகாவின் (Karnataka) தகுதியற்ற 17 எம்.எல்.ஏக்கள் மீதான தீர்ப்பின் வழங்கியது. அது மட்டுமில்லாமல் இரண்டு பெரிய வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றம் நாளை (வியாழக்கிழமை) முக்கியமான தீர்ப்பை வழங்க உள்ளது. அது ரஃபேல் (Rafale Case) மற்றும் சபரிமலை வழக்குகள் (Sabarimala Case) ஆகும். இந்த இரண்டு வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மறுஆய்வு மனு விசாரணை தீர்ப்பை நாளை காலை 10:30 மணிக்கு உச்ச நீதிமன்றம் (Supreme Court of India) அறிவிக்க உள்ளது. அதேசமயம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேக்கி தாக்கல் செய்த அவமதிப்பு மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் வழங்க உள்ளது. "சவுகிதார் சோர் ஹை" (காவல்காரன் ஒரு திருடன்) என மோதி குறித்து ராகுல் காந்தி (Rahul Gandhi) கூறியதற்கு நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியிருந்தாலும், அந்த வழக்கு குறித்து இறுதி தீர்ப்பை நீதிமன்றம் வழங்க உள்ளது.


மேலும் செய்திகளை நேரலையாக பார்க்க நமது ZEE HINDUSTAN TAMIL தொலைக்காட்ஜியை பாருங்கள்