அமராவதி மாநில செயலகத்தில் தனது அலுவலகத்தின் பொறுப்பை முதல்வர் எச்.ஜே. ஜகன் மோகன் ரெட்டி ஏற்றுக்கொள்கிறார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. 


இந்த கூட்டத்தில், 5 பேரை ஆந்திராவின் துணை முதலமைச்சர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் எம்.எல்.ஏ முகமது முஸ்தப்பா சாஹிப் தெரிவித்துள்ளார். பழங்குடியினர்கள், பிற்படுத்தப்பட்டோர்கள், சிறுபான்மையினர்கள் உள்ளிட்ட 5 வெவ்வேறு பிரிவில் இருந்து துணை முதலமைச்சர்களை நியமிக்கப்பட உள்ளனர். இந்நிலையில், அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, அங்கு வைக்கப்பட்டுள்ள தனது தந்தையும் முன்னாள் முதலமைச்சரான ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் உருவப்படத்தை வணங்கினார். முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கு தலைமை செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரிசையில் நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.