COVID-19 VACCINATION: நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி ஜனவரி 3ம் தேதி அதாவது இன்று முதல் தொடங்குகிறது. சமீபத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து, ஜனவரி 1ம் தேதி முதல், COWIN செயலியில் தடுப்பூசிக்கான முன்பதிவு பணி துவங்கியது. இதுவரை நாடு முழுவதும் இருந்து சுமார் 6.35 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று முதல் நாடு முழுவதும் 15 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி (Corona Vaccine) போடுவதற்காக டெல்லியில் 159 மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. டெல்லி அரசின் மாநில சுகாதாரத் திட்டம் தனது பட்டியலை வெளியிட்டுள்ளது. COVAXIN தடுப்பூசி செலுத்தி 30 நிமிடம் கண்காணிப்பில் வைத்த பின்னரே அனுப்பி வைப்பார்கள். 28 நாட்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் செலுத்தப்படும்.


ALSO READ | ஒமிக்ரானுக்கு எதிராக மற்றொரு தடுப்பூசி..! ஆய்வில் தகவல்


அதேசமயம் தமிழகத்தில் 15 முதல் 18 வயது உடையோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைக்கிறார். மாவட்டங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முன்னிலையில் வைத்து இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.


இதனைத் தொடர்ந்து,15- 18 வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட https://www.cowin.gov.in/ கோவின் (COWIN) இணையதளத்தில் நேற்று முதல் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆதார் இல்லாதோர் பத்தாம் வகுப்பு ஐடி கார்டு மூலம் தடுப்பூசி போட முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதன்படி,
* கொரோனா தடுப்பூசி செலுத்த விரும்பும் மாணவர்களுக்கு சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். 
* பள்ளிகளில் தடுப்பூசி பணிகளை ஒருங்கிணைக்க மாவட்ட அளவில் குழு அமைக்க வேண்டும்.
* 2007 மற்றும் அதற்கு முன் பிறந்த பள்ளி மாணவர்களின் விவரங்களை அளிக்கவும்.
* மாணவர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பூசியை மட்டும் செலுத்த வேண்டும்.


ALSO READ | Omicron: இதுவரை ஒமிக்ரான் தொற்றில்லாத 11 மாநிலங்கள்..! எவை?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR