கிழக்கு லடாக்கில் எல்லை பகுதியில் (LAC) இந்தியாவுடனான எல்லை பதட்டத்திற்கு இடையே, சீனா திபெத்தில் உள்ள பிரம்மபுத்ரா ஆற்றின் ஒரு பகுதியில் ஒரு பெரிய நீர் மின் திட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு அமல் படுத்தப்படவுள்ள நாட்டின் 14 வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முன்மொழிவின் ஒரு பகுதியாக அணை கட்ட சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அணையை நிர்மாணிக்கும் பணியை ஒப்படைக்கும் நிறுவனம் குறித்து சீன அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜனாதிபதி ஜி ஜிங்பிங் (Xi Jinping) தலைமையிலான சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே சீனாவிற்கான ஐந்தாண்டு திட்டத்தையும், 2035 க்குள் நீண்டகால இலக்குகளையும் உருவாக்கி வருகிறது.


சீனாவின்(China) பவர் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப் நிறுவனத்தின் தலைவர் யான் ஜியோங், சீனா “யர்லுங் ஜாங்போ ஆற்றின் (பிரம்மபுத்ரா நதிக்கான திபெத்திய பெயர்)  கீழ் பகுதியில் நீர் மின் நிலையத்தை அமைக்கும்” என்றார். இந்த திட்டம் நீர்வளம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பை பராமரிக்க உதவும் என்று குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது, ஞாயிற்றுக்கிழமை சீன கம்யூனிஸ்ட் இளைஞர் கழகத்தின் மத்திய குழுவின் WeChat-ல் ஒரு கட்டுரையை மேற்கோளிட்டுள்ளது.


புதிய நீர் மின் நிலையம் திபெத் (Tibet) தன்னாட்சி பிராந்தியத்திற்கு ஆண்டுக்கு 20 பில்லியன் யுவான் (மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்) வருமானத்தை ஈட்டக்கூடும் என்று யான் கூறினார்.


புதிய அணை கட்ட சீனா எடுத்த முடிவு, இந்தியாவிற்கு (India) வரும் பிரம்மபுத்ரா நதியை கட்டுப்படுத்தும் என இந்தியா கவலைகளை எழுப்பியுள்ளது. திபெத், இந்தியா மற்றும் பங்களாதேஷ் வழியாக பிரம்மபுத்திரா நதி 3,000 கி.மீ. நீளம் கொண்டது.


ALSO READ | ஜோ பைடன் நிர்வாகத்தை நினைத்து சீனா அஞ்சும் காரணம் என்ன..!!!


அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, சிக்கிம், நாகாலாந்து மற்றும் மேற்கு வங்காளத்திற்கு பிரம்மபுத்ரா, ஒரு முக்கியமான நீர் ஆதாரமாக இருப்பதால் இந்தியாவிற்கும் பிரம்மபுத்ரா நதி மிகவும் முக்கியமாகும். பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு பல பழங்குடி சமூகங்களின் வாழ்க்கையை ஆதரிக்கிறது.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR