BRICS Summit 2024: கசானில் நடைபெறும் 16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இரண்டு நாள் பயணமாக ரஷ்யாவுக்கு புறப்பட்டார். அங்கு அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் பிற உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Russia Cheget Briefcase: ரஷ்ய அதிபர் எப்போதும் தன் பக்கத்தில் வைத்திருக்கும் மர்ம பெட்டியின் விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த மர்ம பெட்டியில் என்ன தான் இருக்கிறது? ஏன் அனைவரின் கண்கள் அதன் மீதே உள்ளது? என்பதை பற்றி விரிவாக காணலாம்.
ஜி ஜின்பிங் மற்றும் விளாடிமிர் புடின் இருதரப்பு சந்திப்பின் போது உலகில் நேட்டோவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர். சீனாவுடனான உறவை புதிய நிலைக்கு கொண்டு செல்வதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
ஜி ஜின்பிங்கின் ரஷ்ய பயணம்: புதின் சமீபத்தில் உக்ரைனில் உள்ள மரியுபோல் சென்றார். மேலும் அவருக்கு எதிராக ஐசிசி கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இத்தகைய சூழலில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது நண்பர் புதினை சந்திக்க ரஷ்யா சென்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்த, நித்யானந்தா, தற்போது இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வரும் சீனாவுடன் கை கோர்க்க முயற்சி செய்யும் வேலையில் இறங்கியுள்ளார்.
Jack Ma: ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராக இருந்த சீனாவின் கோடீஸ்வர தொழிலதிபர் ஜாக் மா சீன அரசை விமரித்த காலத்திலிருந்து கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறார்.
சீன அதிபர் ஜின்பிங் - கனடா பிரதமர் ஜஸ்டின் ஆகியோர் உரையாடும் சிறு வீடியோ ஒன்று வைரலானதை அடுத்து, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் அதற்கு விளக்கமளித்துள்ளார்.
ஜி ஜின்பிங்கின் அடக்குமுரை கொள்கைகள், சிவில் உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறை காரணமாக சீன குடிமக்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
ஜின்பிங்கின் இரண்டாவது அதிபர் பதவிக்காலம் முடிவடையவிருக்கும் நிலையில், இந்தாண்டு நடைபெறவிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் மூன்றாவது முறையாக சீன அதிபராக ஜி ஜின்பிங் பதவியேற்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது.
இரு தலைவர்களுக்கு இடையில் நல்ல நட்பு இருந்ததாகவும், ஆனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதன் காரணமாக இரு தலைவர்களுக்கு இடையேயான நட்பு பாதிக்கப்பட்டதாகவும் டிரம்ப் கூறுகிறார்.
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அமெரிக்க தூதுக்குழுவை அனுப்ப வேண்டாம் என்று பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி (Jen Psaki) திங்கள்கிழமை தெரிவித்தார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மத்தியக் குழுவின் நான்கு நாள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம், ஜி ஜின்பிங் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார்.
சீனாவைப் பற்றிய ஒரு அமெரிக்க அறிக்கை வெளிவந்துள்ளது. இது உலக நாடுகளின் பீதியை அதிகரித்துள்ளது. செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்களை சீனா வேகமாக உருவாக்கி வருவதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரிய மற்றும் சீனத் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் நாடுகளின் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் 60 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் செய்திகளைப் பரிமாறிக்கொண்டதோடு தங்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவும் விருப்பம் தெரிவித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.