புதுடெல்லி: இந்தியா சீனா இடையில் எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழல் இருந்து வரும் நிலையில், LAC-ல் படைகளின் நிலைநிறுத்தலைக் குறைக்க, சீனா ஒரு வினோதமான நிபந்தனையை முன்வைத்துள்ளது. ஆம், பாங்காங் த்சோவின் (Pangong Tso) வடக்குக் கரையில் உள்ள ஃபிங்கர் 8 க்குத் திரும்பிச் செல்ல சீனா தயாராக உள்ளது. ஆனால் இந்தியா ஃபிங்கர் 4 இலிருந்து திரும்பிச் சென்று ஃபிங்கர் 2 மற்றும் ஃபிங்கர் 3 க்கு இடையில் படைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா ஏன் தனது படைகளை பின்னுக்கு நகர்த்த வேண்டும்?


முதலாவதாக, இந்தியா (India) தனது பிரதேசம் ஃபிங்கர் 8 வரை நீண்டுள்ளது என்று நம்புகிறது. இந்த நிலையில், இராணுவ தளம் இருக்கும் ஃபிங்கர் 3 க்கு பின்னால் ஏன் திரும்ப வேண்டும்?


ALSO READ: சீனாவில் அராஜகம்: உண்மை பேச எண்ணிய உள்ளம் விலையாகக் கொடுத்தது தன் உயிரை!!


இரண்டாவதாக, இந்த ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் சீனர்கள் ஃபிங்கர் 8 இல் இருந்தபோது இந்திய துருப்புக்களுக்கு எந்த தடையும் இல்லை. இப்போது மட்டும் ஏன் திடீரென இந்தத் தடை?


சீனாவின் (China) இந்த நிபந்தனைக்கு இந்தியா பதிலளித்துள்ளது. ‘மே மாத தொடக்கத்தில் சீனர்கள் இருந்த இடமான ஃபிங்கர் 8 க்கு சீனா திரும்பச் செல்ல வேண்டும். அவர்கள் தான் முதலில் முன்னோக்கி வந்தார்கள். ஆகையால் பின்னோக்கிச் செல்வதையும் அவர்கள்தான் முதலில் செய்ய வேண்டும்.’ என்று இந்தியா கூறியுள்ளது.


ALSO READ: ‘நெருப்போடு விளையாடாதீர்கள்’ எச்சரித்த சீனா: ‘இது துவக்கம்தான், Wait and Watch’ என பதிலளித்த இந்தியா!!


மூன்றாவதாக, சீனர்களைப் பொறுத்த வரை மிகப்பெரிய நம்பிக்கை பற்றாக்குறை உள்ளது. இந்தியா தனது துருப்புக்களை பின்னுக்கு நகர்த்தும்போது சீன மக்கள் விடுதலை இராணுவ (PLA) துருப்புக்கள் ஃபிங்கர் 8 இல் இருக்குமா? அவர்கள் முன்வராமல், தாக்குதல் நடத்தாமல் இருப்பார்களா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.


ஒரு வட கரை-தென் கரை தொகுப்பு ஒப்பந்தம் பற்றி சில பேச்சுக்கள் உள்ளன. ஸ்பாங்கூர் முதல் ரிச்சின் லா வரை தென் கரையில் தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை இந்திய ராணுவம் வைத்திருப்பது குறித்து சீனா கவலைப்படுவதால் இரு கரைகளிலிருந்து ராணுவங்கள் அகற்றப்பட வேண்டும் என சீனா விரும்புகிறது.


ஆகஸ்டின் பிற்பகுதியில் இந்தியா செய்த செயல், அதாவது இந்தியா தென் கரையில் தனது நிலைகளை வலுப்படுத்தியது சீனர்களை கவலையடையச் செய்துள்ளது. இதனால் பதட்டமடைந்துதான் சீனப் படைகள், இருட்டில் இந்திய நிலைகள் வரை ஊர்ந்து செல்வது, காற்றில் துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இப்படி நான்கு முறை நடந்துள்ளது.


சீனா சற்று தன் நிலைப்பாட்டை தளர்த்திக்கொண்டு பேசுவது, அதன் அச்சத்தின் காரணமாகவோ அல்லது வேறு ஒரு சூழ்ச்சியின் துவக்கமாகவோ இருக்கலாம். ஆனால் கால்வானில் நடந்த துரோகத்திற்குப் பிறகு, சீனர்களின் எந்த ஒரு பேச்சையும் உறுதியையும் நம்ப இந்தியா ஆர்வம் காட்டவில்லை. இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனா இருந்த இடங்களுக்கு அந்நாட்டுப் படைகள் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதுதான் அது.


ALSO READ: சீன அதிபர் Xi Jinping-ஐ கோமாளி என கூறிய நபருக்கு 18 ஆண்டுகால சிறை தண்டனை!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR