சீன ராணுவத்தின் செலவினமானது, இந்தியாவின் ராணுவ செலவினத்தை விட மூன்று மடங்கு அதிகம் என மத்திய அமைச்சர் சுபார் பகர் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்தாண்டு பட்ஜெட்டை பொருத்தவரையில் சீனாவின் ராணுவத்துறை செலவினமானது இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகமாகும், ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பாதுகாப்புச் செலவினம் இந்தியாவின் செலுவினத்தை விட குறைவாக உள்ளது என மத்திய அமைச்சர் சுபாஷ் பகர் இன்று லோக் சபா கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளார்.


சீனாவின் வருடாந்திர பாதுகாப்பு பட்ஜெட் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும், ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆய்வு நிறுவனம் (SIPRI) தரவுத்தளத்தின் படி, சீனாவின் இராணுவ செலவினம் 2017 ஆம் ஆண்டில் 2,28,230 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இந்தியாவில் 63,923 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இன்றைய கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், 2016-ஆம் ஆண்டில் சீனா 2,16,031 மில்லியன் அமெரிக்க டாலர் செலவழித்திருந்தது, ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு செலவினம் 56,637 மில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


2017-ம் ஆண்டு இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% இராணுவத்தில் செலவிட்டுள்ளது. அதே சமயம் சீனா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% இராணுவத்தில் செலவழித்துள்ளது என்று அவர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.


அதேவேலையில் 2017-ஆம் ஆண்டில் இந்தியாவின் இராணுவ செலவினங்கள் 9.1% -மாக இருந்தது எனவும், சீனாவின் செலவு 6.1% -மாக இருந்தது எனவும் அமைச்சர் சுபாஷ் பகர் தெரிவித்துள்ளார்!