கிழக்கு லடாக்கில் (Ladakh) இந்தியா சீனா இடையிலான எல்லை பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், சீன இராணுவம் அருணாச்சல பிரதேசத்தின் (Arunachala Pradesh), மேல் சுபன்சிரி மாவட்டத்தில் இருந்து ஐந்து இளைஞர்களை கடத்தியதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, ஐந்து பேரும் அண்டர் நாச்சோ வட்டத்தில் உள்ள செரா 7 ரோந்து இடத்திலிருந்து கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட ஐவரும் தும்து எபியா, பிரசாத் ரிங்லிங், நகரு தேரி, டோச் சிங்காம் மற்றும் தனு பக்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யாவில், இந்திய சீன எல்லைப் பதட்டங்களைப் பற்றி பேச, சீன பாதுகாப்பு அமைச்சரை சந்தித்துக்கொண்டிருந்தபோது, ​​இந்த கடத்தல் நடந்ததாக காங்கிரஸ் எம்.எல்.ஏ நினோங் எரிங் தெரிவித்தார்.



ALSO READ: "அமைதி ஏற்பட நம்பிக்கை தேவை": சீன பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் ராஜ்நாத் சிங்


“சீனாவின் PLA (மக்கள் விடுதலை இராணுவம்) அருணாச்சல பிரதேசத்தின் நாச்சோ, அப்பர் சுபன்சிரியைச் சேர்ந்த 5 சிறுவர்களை கடத்திச் சென்றுள்ளது. ரஷ்ய மற்றும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்களை ராஜ்நாத் சிங் (Rajnath Singh) சந்திக்கும் நேரத்தில் இது நடந்துள்ளது. பி.எல்.ஏவின் நடவடிக்கை மிகவும் தவறான செய்தியை அனுப்பியுள்ளது” என்று நினோங் எரிங் ட்வீட் செய்துள்ளார்.


எனினும், தேஸ்பூர் தலைமையகத்தை தளமாகக் கொண்ட ஒரு பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் அத்தகைய கடத்தல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று இந்த செய்தியை மறுத்தார். "அருணாச்சல பிரதேசத்தில் PLA நான்கு சிறுவர்களை கடத்தியதாக எந்த தகவலும் இல்லை" என்று பாதுகாப்பு PRO ஹர்ஷ வர்தன் பாண்டே கூறினார். காணாமல் போனவர்களின் அறிக்கை எதுகும் மேல் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள எந்த காவல் நிலையத்திலும் பதிவு செய்யப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.


இரண்டு மாறுபட்ட அறிக்கைகள் வந்துள்ள இந்த நிலையில் இது குறித்த உறுதியான தகவல்கள் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


ALSO READ: “சீண்ட நினைத்தால் சிக்கிக் கொள்வீர்கள்” – பாகிஸ்தானை எச்சரித்த CDS பிபின் ராவத்!!