உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நாளைமறுநாள் ஓய்வு பெறும் நிலையில், இன்று கடைசி பணிநாளை நிறைவு செய்தார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்சநீதிமன்றத்தின் 46-வது  தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். நவம்பர் 16,17 ஆகிய தினங்கள் விடுமுறை தினங்கள் என்பதால் அவருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி பணி நாள் ஆகும். அசாம் மாநிலத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள திப்ருகர் நகரில் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி 1954 ஆம் பிறந்தார் ரஞ்சன் கோகாய். இவரின் தந்தை கேசவ் சந்திரகோகாய், 1982-லில் அசாம் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர்.   


தனது தந்தையைப்போலவே சட்டம் பயின்ற ரஞ்சன் கோகாய், 1978 முதல் குவஹாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார்.   2001ல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2010-லில் பஞ்சாம் மற்றும் அரியானா உயர்நீதி மன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.  2011-லில் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.  2018ம் ஆண்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் அக்டோபர் 3 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.


இவர் தனது பதவி காலத்தில் அயோத்தியா, ரபேல், சபரிமலை விவகாராம் உள்ளிட்ட மிகவும் முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். இதற்கிடையில் தலைமை நீதிபதியின் பதவிக்காலம் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் (நவம்பர் 17) நிறைவடைகிறது. ஆனால், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால் இன்று அவரது பணிக்காலத்தின் கடைசி நாள் ஆகும்.


இந்நிலையில், தனது பணிக்காலத்தின் இறுதி தினமான இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் டெல்லியில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்றார். அங்கு அவர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.