ராகுல் காந்திக்கு தண்டனை கொடுத்த நீதிபதிக்கு பதவி உயர்வு!
ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்மான ஹரிஷ் வர்மாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மோடி அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை விதித்த சூரத் தலைமை நீதிமன்ற நீதிபதி (CJM) ஹரிஷ் வர்மாவுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இப்போது அவர் பதவி உயர்வு பெற்று ராஜ்கோட்டின் கூடுதல் மாவட்ட நீதிபதியாக (ADJ) நியமிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் அரசின் சட்டத்துறை வெளியிட்டுள்ள மொத்தம் 68 நீதிபதிகளின் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வுகளில் வர்மாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறிய மோடியின் குடும்பப்பெயர் அவதூறு வழக்கில் வர்மா சூரத் நீதிமன்றத்தில் சிஜேஎம் ஆக இருந்த வர்மா, ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார். இத்தீர்ப்பை தொடர்ந்து, ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியை இழந்தார்.
பதவி உயர்வு
இந்நிலையில், குஜராத் அரசு நீதிபதிகள் இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதில், ஐந்து நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மாறிய, வர்மா வதோதராவைச் சேர்ந்தவர். வதோதரா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்துள்ளார். தொடக்கத்தில் சில நாட்கள் அரசின் சட்டத்துறை செயலாளராகவும் இருந்துள்ளார். இதையடுத்து, 2008ல், நீதித்துறைக்கு வந்தார்.
மேலும் படிக்க | ராகுல் காந்தி மேல்முறையீடு மனு டிஸ்மிஸ்; அடுத்து என்ன?
சூரத்தின் ஆறு நீதிபதிகளுக்கு பதவி உயர்வு
மாநில சட்டத்துறையால் 68 நீதிபதிகள் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மா உள்பட சூரத் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு நீதிமன்றங்களின் 6 நீதிபதிகள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நீதிபதி ஹரிஷ் வர்மா கூடுதல் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்று ராஜ்கோட் மாவட்ட நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஐந்து நீதிபதிகள் மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்று சூரத் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த பட்டியலில், சூரத்தின் தலைமை நீதிமன்ற நீதிபதி மற்றும் கூடுதல் மூத்த சிவில் நீதிபதி ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மா ராஜ்கோட் மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு பதிலாக சூரத்தின் நீதிபதி எம்.ஆர்.கேர் பொறுப்பேற்றுள்ளார்.
கடுமையான விமர்சனம்
மோடி குடும்ப பெயர் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, ராகுல் காந்தி வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். மேலும், சூரத் நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அவர் டெல்லி அரசு மாளிகையை காலி செய்து அரசிடம் ஒப்படைத்தார். தற்போது, அவர் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மும்முரமாக பரப்புரை பணியில் ஈடுப்பட்டுள்ளார். ராகுல் காந்தியின் மீதான இந்த வழக்கு, தீர்ப்பு ஆகியவை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ