டெல்லியில் புதிய பாலம் திறப்பு விழாவில் பா.ஜ.க. எம்பி மனோஜ் திவாரியின் ஆதரவாளர்களுக்கும், ஆம் ஆத்மி கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடக்கு மற்றும் வடகிழக்கு டெல்லிக்கு இடையிலான பயண நேரத்தை குறைக்க யமுனா ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் திட்டத்தை அமல்படுத்தியது டெல்லி அரசு. சுமார் 154 மீட்டர் உயரமான கண்ணாடி பெட்டியுடன் ஒரு சுற்றுலாத் தளத்தை போன்று பார்வையாளர்களை கவருகிறது இந்த சிக்னேச்சர் பாலம். 


அதுமட்டும் இன்றி முழு டெல்லி மாநகரின் அழைகைக்கான பாலத்தின் உச்சிக்கு பாரவையாலர்களை அழைத்தது செல்லும் திறன்கொண்ட லிஃப்ட்-களும் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில், 2004 ஆம் ஆண்டு முதல் இந்த பாலம் பல காலக்கெடுவை இழந்து விட்டது. 2004 ஆம் ஆண்டில் இந்த பாலம் முன்வைக்கப்பட்டது. ஆனால் 2007 ல் தில்லி அமைச்சரவை ஒப்புதல் பெற்றது. ஆரம்பத்தில் இது ரூ. 1,131 கோடி மதிப்பீட்டில் 2010 அக்டோபரில் டெல்லியில் நடைபெற்றது.


2015 ஆம் ஆண்டு, இந்த திட்டத்தின் செலவு 1,594 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 1997 ஆம் ஆண்டு முதல் 464 கோடி ரூபாய்க்கு ஆரம்ப கட்டமாக இந்த பாலம் ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது பாலத்தின் பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில், இன்று பாலத்தை டெல்லி முதலவர் கெஜ்ரிவால் திறந்துவைக்கிறார். 



இந்நிலையில், பாலம் அமைந்துள்ள வடகிழக்கு டெல்லி தொகுதி எம்.பி.யான பா.ஜ.க.வின் மனோஜ் திவாரிக்கு டெல்லி அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை என ஏற்கனவே சர்ச்சை எழுந்தது.


இந்நிலையில், இன்று நடைபெற்ற பாலம் திறப்பு விழாவின்போது, அவரது ஆதரவாளர்களுக்கும், ஆம் ஆத்மி கட்சியினருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் மூண்டது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.