இந்தியாவில் சமூக பரவலாக மாறிய COVID-19... நமது நிலைமை என்ன?...
இந்தியாவில் COVID-19 சமூக பரவலாக மாறத் தொடங்கி உள்ளதாக மக்களை கடுமையாக எச்சரிக்கும் IMA!
இந்தியாவில் COVID-19 சமூக பரவலாக மாறத் தொடங்கி உள்ளதாக மக்களை கடுமையாக எச்சரிக்கும் IMA!
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், இந்தியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் மூன்றாம் நிலை பரவலுக்குள் நுழைந்துவிட்டோம் என்று இந்திய மெடிக்கல் அசோசியேஷன் (IMA) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நேற்று மட்டும் சுமார் 34000 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. சமீபத்திய சுகாதார அமைச்சின்அறிக்கையின் படி, இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,038,716-யை எட்டியுள்ளன. இவற்றில், 358,629 செயலில் உள்ள பாதிப்புகள் மற்றும் 653,751 குணப்படுத்தப்பட்ட / வெளியேற்றப்பட்ட மக்கள். இதுவரை, மொத்தம் 26,273 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாதிப்புகள் நகரங்கள் மற்றும் கிராமங்களில் அதிகமாக பரவி வருகிறது. அங்கு நிலைமையைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். "டெல்லியில், எங்களால் அதைக் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, கோவா, மத்தியப் பிரதேசம் (இது புதிய ஹாட்ஸ்பாட்களாக இருக்கலாம்) ஆகிய நாட்டின் உள் பகுதிகளைப் பற்றிய நிலைமை என்ன? எனபதை கணிக்க முடியவில்லை". இதுவரை, அதாவது ஜூலை 17 வரை சுமார் 13,433,742 கொரோனா பரிசோதனை மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும், சுமார் 361,024 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.
READ | COVID-19 தோற்றுக்கான புதிய அறிகுறி அறிவிப்பு... நீளும் Symptoms பட்டியல்...
தினமும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான தோற்றுக்கள் வர தொடங்கி உள்ளது. இது இந்தியாவில் மிகவும் மோசமான சூழ்நிலை, நமது சூழ்நிலை மூன்றாம் கட்டத்தை தாண்டிவிட்டது. எனென்றால், முன்பு நகரத்தில் மட்டுமே கொரோனா பரவியது. ஆனால், தற்போது கிராமத்திற்கும் கொரோனா பரவ தொடங்கி உள்ளது. இது மிக மோசமான அறிகுறியின் நிலை. இதை கட்டுப்படுத்துவது கடினம். கிராமங்கள் முழுக்க கொரோனா பரவல் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. நினைத்தை விட வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க 70% பேருக்கு கொரோனா ஏற்பட்டு, அதில் இருந்து அவர்கள் மீள வேண்டும், அல்லது தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும். இதை தவிர வேறு வழியில்லை என்று மருத்துவமனை வாரியத்தின் தலைவர் டாக்டர் வி கே மோங்கா ANI-யிடம் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதியில் சமூக பரவல் ஏற்பட்டு இருப்பதாக அம்மாநில அரசு ஒப்புக்கொண்டு இருக்கிறது. ஆனால், இன்னும் மத்திய அரசு சமூக பரவலை ஒப்புக்கொள்ளவில்லை. கொரோனா சமூக பரவல் ஏற்பட்டுவிட்டதாக மத்திய அரசோ, தமிழக அரசோ கூறவில்லை. ஆனால், புதிய திருப்பமாக இந்திய மெடிக்கல் அசோசியேஷன் (IMA) தெரிவித்துள்ளது.