ரபேல் விவகாரத்தில் விசாரணை நடைபெற்றால் பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்த வந்த நிலையில், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா ரபேல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.



இந்நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவிக்கையில்...


"ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி ஊழல் செய்தார் என்பதை நிரூபிக்க உரிய ஆதாரங்கள் உள்ளன. டசால்ட் ஏவியேஷன் நிறுவன தலைமை செயல் அதிகாரி வெளியிட்டுள்ள தகவலின்படி, நிலத்துக்காக அந்த தொகை தரப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் டசால்ட் நிறுவனம் லஞ்சமாக அளித்த 284 கோடி ரூபாய் தொகையை வைத்து தான் அனில் அம்பானி அந்த நிலத்தை வாங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. 


நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்திற்கு டசாலட் நிறுவனம் 284 கோடி ரூபாய் தர வேண்டிய அவரசியம் என்ன? எனவே டசால்ட் நிறுவன அதிகாரி பொய் கூறுகின்றார். இந்த ஒப்பந்தமே பிரதமர் நரேந்திர மோடி, அனில் அம்பானி என்ற இரு நபர்களுக்கிடையே செய்யப்பட்டுள்ளது. 


பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார். பாதுகாப்புத்துறை அனைச்சகம் இதில் தலையிடவில்லை. நாடாளுன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டால் முழு உண்மையும் வெளியே வரும். இந்த விவகாரம் தெரிந்ததால் தான் CBI இயக்குனர் நீக்கப்பட்டார். 


ரபேல் விவகாரத்தில் விசாரணை நடைபெற்றால் உண்மை எல்லாம் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற அச்சத்தில் இரவு முழுவதும் தூங்காமல் பிரதமர் மோடி தவித்து வருகிறார்" என குறிப்பிட்டுள்ளார்