I.N.D.I.A கூட்டணி தொகுதி பங்கீடு.. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின் விவாதிக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை
INDIA Alliance Seat Sharing: 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு செய்தால், காங்கிரஸ் கட்சிக்கு நல்லது என கட்சியின் சில தலைவர்கள் கோரிக்கை.
India News In Tamil: ஐ.என்.டி.ஐ.ஏ. (I.N.D.I.A) கூட்டணிக் கட்சிகளுடன் சீட் பங்கீடு குறித்து, இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களின் சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு விவாதிக்க வேண்டும் என செப்டம்பர் 16 மற்றும் 17 என இரண்டு நாட்கள் ஹைதராபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி (CWC) கூட்டத்தில் சில காங்கிரஸ் தலைவர்கள் கட்சி மேலிடத்திடம் கூறியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கோரிக்கையை முன்வைத்த பெரும்பாலான தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு நேரடிப் போட்டி உள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று ஆதாரங்களை மேற்கோள்காட்டி பிடிஐ ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிறப்பாகச் செயல்பட்டு, பெற்றி பெறுவதன் மூலம், நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டின் போது வலுவான நிலையில் காங்கிரஸ் இருக்கும் என்று இந்தத் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு எந்த இழப்பும் இருக்கக்கூடாது:
ஹைதராபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி (CWC) கூட்டத்தில், காங்கிரஸ் மற்றும் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து கட்சித் தலைமை வலியுறுத்தியது. அப்பொழுது கருத்து தெரிவித்த சில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள், ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்பதில் எந்தமாற்று கருத்தும் இல்லை. அதேநேரத்தில் அதனால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த இழப்பும் ஏற்படக்கூடாது என்பதும் முக்கியம் என வலியுறுத்தி உள்ளனர்.
ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்:
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் இன்னும் தேதிகளை அறிவிக்கவில்லை என்றாலும், அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
பல மாநிலங்களில் சீட் பங்கீட்டில் ஒருமித்த கருத்து இல்லை:
ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த ஐ.என்.டி.ஐ.ஏ (I.N.D.I.A\) கூட்டணி செயல்பட்டு வருகிறது. ஆனால் அதில் சில சிக்கல்களும் உள்ளன. பஞ்சாப், டெல்லி, கேரளா, மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்களில் சீட் பங்கீட்டில் ஒருமித்த கருத்து இல்லை. ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் ஆகியோர் செப்டம்பர் இறுதிக்குள் தொகுதி பங்கீடு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றான்ர்.
மேலும் படிக்க - பழைய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் கடைசி உரை... சில முக்கிய அம்சங்கள்!
ஆம் ஆத்மி கட்சியை அமைதியா இருக்க சொல்லுங்க-அஜய் மாக்கன்
காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மாக்கன் கூறுகையில், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியில் சில தலைவர்கள், காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசுவதோடு, கட்சி தலைவர்களையும் விமர்சித்து வருகின்றனர். இது இரண்டு கட்சிகளுக்கும் இடையே பாதிப்பை ஏற்படுத்துகின்றனர் என்றார். மேலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ள மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து வருவதாகவும் அஜய் மாக்கன் தெரிவித்துள்ளார். அங்கு காங்கிரஸ் தலைவர்களை ஆம் ஆத்மி தாக்கி பேசி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க விருப்பமில்லை -பஞ்சாப் காங்கிரஸ்
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாடிங் கூறுகையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் காங்கிரசை சேர்ந்தவர்களை தாக்கி பேசி வருவதால், அந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் எனக்கு விருப்பமில்லை என்றார். இதுகுறித்து தனித்தனியாக விவாதிக்கப்படும் என்றும், ஒவ்வொரு மாநில பிரிவுகளின் ஆலோசனையின் பேரில் தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உறுதி அளித்து இருப்பதாக அவர்] கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ