என்னை எப்படி அழைக்க முடியும்? ஆவேசமடைந்த கார்கே பதிலடி தந்த பியூஷ் கோயல்
Mallikarjun Kharge Questions: மத்திய பாஜக அரசு திட்டமிட்டு எங்களை பயமுறுத்தலாம். ஆனால் நாங்கள் பயப்பட மாட்டோம். தொடர்ந்து போராடுவோம் என மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
Mallikarjun Kharge vs Piyush Goyal: நேஷனல் ஹெரால்டு வழக்கு: காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி மல்லிகார்ஜுன் கார்கே திங்கள்கிழமை (ஆகஸ்ட் 4, 2022) அமலாக்க இயக்குனரகம் (Enforcement Directorate) சம்மன் அனுப்பிய விதம் குறித்து கேள்வி எழுப்பினார். அவர் ராஜ்யசபா பேசும் போது, "நாடாளுமன்றம் கூட்டத்தொடர் நடந்துக்கொண்டு இருக்கும் போது என்னை எப்படி அழைப்பார்கள்?" எனக் கேட்டதோடு, காங்கிரஸ் கட்சியை மிரட்ட மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். நேஷனல் ஹெரால்டு தொடர்பான பணமோசடி வழக்கில் கார்கேவை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது. நேற்று யங் இந்தியா லிமிடெட் அலுவலகத்திற்கு ED சீல் வைத்தது. இதே நிறுவனம்தான் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்துகிறது. கார்கே இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டபோது அவர் அங்கு இல்லை.
இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது ராஜ்யசபாவில் அமலாக்கத்துறைக்கு சம்மன் அனுப்புவது குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் கார்கே, "நான் மதியம் 12:30 மணிக்கு அமலாக்கத்துறை முன் ஆஜராக வேண்டும். நான் சட்டத்தை பின்பற்ற விரும்புகிறேன் மதிக்கிறேன். ஆனால் பாராளுமன்ற கூட்டத் தொடரின் நடுவில் என்னை அழைப்பது முறையா? நேற்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜனநாயகம் வாழுமா? அரசியல் சாசனத்தின்படி செயல்படுகிறோமா? என அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்பிய அவர், திட்டமிட்டு எங்களை பயமுறுத்தலாம், ஆனால் நாங்கள் பயப்பட மாட்டோம். தொடர்ந்து போராடுவோம்" என்றார்.
மேலும் படிக்க: யங் இந்தியன் அலுவலகத்தில் மல்லிகார்ஜுன் கார்கே முன்னிலையில் ED சோதனை
கார்கேவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், சட்டத்தை மதிக்கும் எந்த ஒரு மத்திய புலனாய்வு அமைப்பின் பணிகளில் அரசு தலையிடாது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இது போன்ற ஒரு பாரம்பரியம் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் யார் தவறு செய்தாலும், சட்ட அமைப்புகள் தங்கள் பணியை செய்ய சுதந்திரமாக உள்ளன என்றார்.
மேலும் படிக்க: நேஷனல் ஹெரால்டு வழக்கின் முழுப் பின்னணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ