யங் இந்தியன் அலுவலகத்தில் மல்லிகார்ஜுன் கார்கே முன்னிலையில் ED சோதனை

National Herald Case: காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்னியில் யங் இந்தியன் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 4, 2022, 05:25 PM IST
யங் இந்தியன் அலுவலகத்தில் மல்லிகார்ஜுன் கார்கே முன்னிலையில் ED சோதனை title=

புது டில்லி: பணமோசடி வழக்கு தொடர்பாக நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் ஹோல்டிங் நிறுவனமான யங் இந்தியன் (ஒய்ஐ) அலுவலகத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் (National Herald corruption case) மத்திய அமைப்பான அமலாக்க இயக்குநரகம் (ED) இன்று (வியாழக்கிழமை) சோதனை நடத்தியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கட்டுப்பாட்டில் உள்ள யங் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தின் டெல்லியில் அலுவலகத்தை திறந்து ​​காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே (Mallikarjun Kharge) முன்னிலையில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. முன்னதாக, புது டில்லி பஹதூர் ஷா ஜாபர் மார்க்கில் உள்ள ஹெரால்டு ஹவுஸ், யங் இந்தியா அலுவலகத்திற்கு சீல் வைத்து யாரும் நுழையக் கூடாது என ஏஜென்சி நோட்டீஸ் ஒட்டியது. மேலும் சாலையின் இருபுறமும் தடுப்பு காவல் போடப்பட்டது. அமலாக்கத்துறையின் இந்த செயலை விமர்சித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இதன் மூலம் தனது கட்சியினரை மிரட்ட பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். 

நேஷனல் ஹெரால்டு வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பின் நடவடிக்கையை பழிவாங்கும் செயல் எனக்கூறி, காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசுக்கு எதிராக களம் இறங்கியிருக்கும் நேரத்தில் இந்த ரெய்டு நடந்துள்ளது.

80 வயதான ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மதியம் 12:40 மணியளவில் ITO அருகே உள்ள பகதூர் ஷா ஜாபர் மார்க்கில் உள்ள நேஷனல் ஹெரால்டு பவனுக்கு சென்றடைந்தார். யங் இந்தியன் (Young Indian) நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருக்கும் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அமலாக்க இயக்குனரகம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து, சோதனை நடைபெறும் இடத்திற்கு சென்று ED அதிகாரிகளைச் சந்தித்தார். செவ்வாயன்று நேஷனல் ஹெரால்டு உட்பட யங் இந்தியா அலுவலகத்தை சோதனை செய்தது. சோதனை முடிந்த அடுத்த நாளே யங் இந்தியாவின் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. 

மேலும் படிக்க: நேஷனல் ஹெரால்டு வழக்கின் முழுப் பின்னணி

இதுக்குறித்த விளக்கம் அளித்த Enforcement Directorate அதிகாரிகளின் கூற்றுப்படி, செவ்வாய்கிழமை நடந்த சோதனையின் போது யங் இந்தியா அலுவலகத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஊழியரோ அல்லது அதிகாரியோ இல்லை. போதிய அவகாசம் கொடுத்தும் யாரும் வரவில்லை. பொறுப்பான அதிகாரி அல்லது பணியாளர் இல்லாததால் யங் இந்தியா அலுவலகத்தில் சோதனை பணியை முழுமையாக முடிக்க முடியவில்லை. இதன் காரணமாக யங் இந்தியா அலுவலகத்துக்கு புதன்கிழமை சீல் வைக்க முடிவு செய்யப்பட்டது. நிறுவனத்தின் பொறுப்பு அதிகாரி முன்னிலையில் யங் இந்தியா அலுவலகம் திறக்கப்படும் என்றும், அவர் முன்னிலையில் சோதனை பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது ஆதாரங்கள் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி (Sonia Gandhi) மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (Rahul Gandhi) ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், செவ்வாய்க்கிழமை யங் இந்தியா நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது. யங் இந்தியன் அலுவலகத்திற்கு அமலாக்க இயக்குநரகம் சீல் வைத்ததால் கோபமடைந்த காங்கிரஸ், மதிய அரசுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை நசுக்க பாஜக விரும்புவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு அஞ்சப்போவதில்லை என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: பேனா நினைவு சின்ன எதிர்ப்புக்கு காரணம் என்ன?... விளக்கும் அழகிரி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News