ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது, எனினும் மாணவர்கள் வருகை குறைவாக இருந்ததாகவே கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இதனை விமர்சிக்கும் விதமாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ‘இது பாஜக-வின் புதிய வகை இயல்பு நிலை என விமர்சித்துள்ளார்’


ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவினை ஆளும் பாஜக அரசு திரும்ப பெறுவதாக அறிவித்த நிலையில் காஷ்மீரில் பதற்றம் ஒட்டிக்கொண்டது. இந்நிலையில் இயல்புநிலைக்கு திரும்பும் விதமாக இன்று ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டது.  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் தவிர, அரசாங்க அலுவலகங்களும் பள்ளத்தாக்கில் மீண்டும் திறக்கப்பட்டன.


மேலும் 50 காவல் நிலை சரகங்களில் கட்டுப்பாடுகள் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தளர்த்தப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட இடங்களில் அமைதி நிலவுவதாகவும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும் கன்சால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டதால் கடைவீதிகளில் மக்கள் நடமாட்டமும் அதிக அளவில் காணப்பட்டது. தொலைத் தொடர்பு ஊழியர்கள் இரவு பகலாக தொடர்புகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் ஜம்முவில் இயல்பு நிலை திரும்பவில்லை, இயல்பு நிலை திரும்பியதாக அறிவிக்கும் அரசு எதன் அடிப்படையில் இவ்வாறு தெரிவிக்கிறது என காங்கிஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது



"இயல்பு நிலைக்கு திரும்பியது காஷ்மிர், பள்ளிகள் திறக்கப்பட்டது ஆனால் மாணவர்கள் இல்லை.
இயல்பு நிலைக்கு திரும்பியது காஷ்மிர், இணையம் மீண்டும் முடக்கப்பட்டது.
இயல்பு நிலைக்கு திரும்பியது காஷ்மிர், ஆனால் மெஹபூபா மகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார், என் என்று கேட்டால் பதில் இல்லை.


புரிந்துக்கொள்ளுங்கள் இது தான் புதிய இயல்பு நிலை" என விமர்சித்துள்ளார்.