புது டெல்லி: காஷ்மீரில் வன்முறை ஒருபோதும் வெல்லாது என்று முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Congress leader Rahul Gandhi) நேற்று (திங்கள்கிழமை) தெரிவித்தார். அனந்த்நாக் மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு சர்பஞ்சின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

READ | ஜூன் 15 ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது: HC


அனந்த்நாக் (Anantnag) மாவட்டத்தில் உள்ள லர்கிபோரா பகுதியைச் சேர்ந்த காஷ்மீர் பண்டிட் சர்பஞ்ச் மற்றும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான அஜய் பண்டிதா தனது சொந்த கிராமத்தில் மாலை 6 மணியளவில் போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.


 



READ | DMK MLA ஜெ.அன்பழகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


காஷ்மீரில் ஜனநாயக வழிமுறைகளுக்காக பண்டிதா தனது உயிரை தியாகம் செய்தார் என்று ராகுல் காந்தி (Rahul Gandhi) கூறினார்.


முன்னால் காங்கிரஸ் (Congress) தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "காஷ்மீரில் (Kashmir) ஜனநாயக வழிமுறைகளுக்காக தனது உயிரைத் தியாகம் செய்த அஜய் பண்டிதாவின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கல். இந்த வருத்தத்தில் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். வன்முறை ஒருபோதும் வெல்லாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.


READ | இந்தியாவில் ஊரடங்கின் நோக்கம் தோல்வி அடைந்துவிட்டது: ராகுல்காந்தி