`மோடியும் 40 திருடர்களும்` - Rafale விவகாரத்தில் காங்கிரஸ் காட்டம்!
ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் மோடி அரசு எப்போது பதில் அளிக்கப் போகிறது என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது!
ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் மோடி அரசு எப்போது பதில் அளிக்கப் போகிறது என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது!
பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக - காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரான ராபர்ட் வதேராவின் நண்பர் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளிக்காத காரணத்தால்தான் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது எனவும், சர்வதேச அளவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஹோலண்டேயின் உதவியுடன் ரபேல் ஒப்பந்தத்தைச் சிதைக்கத் துணிந்துள்ளனர் எனவும் பாஜகவினர் குற்றம்சாட்டினர்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் இன்று காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் இன்று தெரிவித்துள்ளதாவது....
''ரபேல் போர் விமானக் கொள்முதலில் நடந்த ஊழல் குறித்து கேள்வி கேட்டாள், கேட்பவரின் குடும்பத்தாரினை மீது சேற்றை வாரி இறைப்புது தான் பாஜக-வின் குணம்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது, அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி ஆட்சி அனில் அம்பானியின் டிபென்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளித்துள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது, 2012-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி ஒப்பந்தப் புள்ளி கொடுக்கப்பட்டது, 2014-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் நாள் ஒப்பந்தப் புள்ளி திறக்ப்பட்டது. நாங்கள் மத்திய அரசின் HAL நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளித்தோம். ஆனால், மோடி அரசு HAl நிறுவனத்துக்குக் கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் காரணம் கேட்டால், மத்திய அமைச்சர்களும், பாஜகவினரும் தவறான வார்த்தைகளையும், சேற்றை வாரி இறைக்கும் பேச்சுகளையும் பேசுகிறார்கள்.
இந்நாடு 'அலிபாபாவும் 40 திருடர்களும்' என்ற கதையைக் கேட்டிருக்கிறது, ஆனால், தற்போது மோடி ஆட்சியில் நேரடியாக பார்த்து வருகின்றது. பிரதமர் மோடி நாட்டுக்குப் பிரதமரா? இல்லை அம்பானிக்குப் பிரதமரா?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.