கர்நாடக சட்டசபை தேர்தல் 2023: இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்
Karnataka Assembly Elections 2023: கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதன் முழுவிவரம் குறித்து அறிந்துக்கொள்ளுவோம்.
Congress Releases Final Candidate List: கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்கள் அடங்கிய ஆறாவது மற்றும் இறுதி பட்டியலை இன்று (ஏப்ரல் 20, வியாழக்கிழமை) அதிகாலை காங்கிரஸ் வெளியிட்டது. இந்த ஆறாவது பட்டியலுடன், காங்கிரஸ் 223 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் 223 இடங்களில் போட்டியிடும், மாநில கட்சியான சர்வோதய கர்நாடகா கட்சிக்கு ஒரு இடத்தை வழங்கியுள்ளது.
இன்று அறிவிக்கப்பட்ட 5 வேட்பாளர்கள் விவரங்கள்:
- முகமது ஷலாம் (ராய்ச்சூர் தொகுதி)
- பிவி ராஜீவ் கவுடா (சிட்லகட்டா தொகுதி)
- எஸ்.ஆனந்த் குமார் (சிவி ராமன் நகர் தொகுதி),
- எச்.பி. ஸ்ரீதர் கவுடா (ஆர்கல்கூடில் தொகுதி
- இனாயத் அலி (வடக்கு மங்களூர் சிட்டி தொகுதி)
ஐந்தாவது பட்டியலில் இடம் பெற்ற வேட்பாளர்கள் விவரங்கள்:
நேற்று இரவு, மூன்று புதிய வேட்பாளர்களுடன் கட்சி தனது ஐந்தாவது பட்டியலை வெளியிட்டது. அதில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர்களின் விவரங்கள் பின்வருமாறு:
- பிசி முத்துகங்காதர் (முல்பாகல் (எஸ்சி) தொகுதி)
- வில் டிகே மோகன் (கேஆர் புரா தொகுதி)
- ஏசி சீனிவாசன் (புலகேசிநகர் எஸ்சி தொகுதி)
இன்று (ஏப்ரல் 20) வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளாகும். கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெற்று. தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் விவரங்கள்:
- வேட்புமனு தாக்கல் கடைசி நாள்: ஏப்ரல் 20
- சட்டசபை தேர்தல் நடைபெறும் நாள்: மே 10
- வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்: மே 13
சிறப்பு கவனம் பெற்ற கர்நாடக சட்டசபை தேர்தல்:
அனைத்து மாநில தேர்தல்களும் முக்கியமானவை, ஆனால் கர்நாடகாவில் வரவிருக்கும் தேர்தல் பல காரணங்களுக்காக சிறப்பு கவனம் பெற்றுள்ளது. முதலாவதாக, கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைத்ததிலிருந்து சில முக்கியத் தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டனர். முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா முதல்வர் வேட்பாளராக வரமாட்டார். இரண்டாவதாக, காங்கிரஸின் 75 வயதான முன்னாள் முதலமைச்சரும், கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய தலைவருமான சித்தராமையா, இதுவே தனது கடைசித் தேர்தல் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார். அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு காங்கிரஸை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். மூன்றாவதாக, ஜனதா தளம் (மதச்சார்பற்ற) அதன் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எச்.டி. குமாரசாமி காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதி:
இந்த கர்நாடகா தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலிலும் தீவிர தாக்கங்களை ஏற்படுத்தும். 2023-ல் தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பல மாநிலங்களில் பாஜக கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் பல மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல்கள் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கியமான நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே நடைபெறும் அரையிறுதிப் போட்டிகள் என்று குறிப்பிடப்படுகின்றன.
மேலும் படிக்க: தமிழகத்தில் பாஜக - அதிமுக தேர்தல் கூட்டணி? எச் ராஜா சொன்ன தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ