மும்பையை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும்,  ஊடக ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்கான கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இராஜினமா குறித்து கடிதத்தில் அவர் கூறியதாவது:- 10 வருடத்துக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்த நான், அதை நூறு சதவிகிதம் அர்ப்பணிப்புடன் என் வேலையை சரியாகவே செய்திருக்கிறேன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிக்காக சேவை செய்து வந்தேன். ஆனால் சில நாட்களாக எனது சேவை கட்சியில் மதிக்கப்படவில்லை என உணருகிறேன்.


 



சில நாட்களுக்கு முன்பு மதுராவில் செய்தியாளர் சந்திப்பில் ஒரு சில கட்சி நிர்வாகிகள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டனர். அவர்களை கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்ப்பட்டனர். ஆனால் மீண்டும் அவர்களை கட்சிக்குள் சேர்க்கப்பட்டு உள்ளது. இது நான் அளித்த புகாரை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. இதற்கு பிறகும் நான் கட்சியில் இருப்பது கண்ணியமற்றது என நினைக்கிறேன். அதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன் என கடிதத்தில் தனது ராஜினாமா குறித்த விவரங்களை கூறியுள்ளார்.