புது டெல்லி: காங்கிரஸ் கட்சி திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. அதில் முக்கியமாக நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காங்கிரஸ் கமிட்டி ஒவ்வொரு ஏழை தொழிலாளி மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளியின் ரயில் பயணத்திற்கான செலவை ஏற்கும் என்று கூறியுள்ளது. தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நாடு தழுவிய அளவில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால், அவர்கள் தனது சொந்த மாநிலத்திற்கு செல்ல சிரமப்படுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது "எங்கள் தோழர்களின் சேவையில் தாழ்மையான பங்களிப்பு மற்றும் அவர்களுடன் ஒற்றுமையுடன் தோளோடு தோள் நிற்க" என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு அறிக்கையில், தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் இந்தியாவின் வளர்ச்சியின் தூதர்கள் என்றும், வெளிநாட்டிலிருந்து திரும்பக் கொண்டு வரப்பட்டவர்களைப் போல "அதே மரியாதைக்குரிய வகையில்" அவர்களுக்கு ஏன் செய்ய முடியாது என்றும் கேட்டுள்ளார். 


வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் நமது குடிமக்களுக்கு இலவச விமான பயணத்தை ஏற்பாடு செய்வதன் மூலம் நமது அரசாங்கம் தனது பொறுப்பை அங்கீகரிக்கும் போது, ​​குஜராத்தில் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ், அரசாங்கம் கிட்டத்தட்ட ரூ .100 கோடியை ஏழைகளின் போக்குவரத்து மற்றும் உணவு போன்றவற்றுக்காக செலவிட முடியும். 


இந்தியன் ரயில்வே அமைச்சகம் பிரதமரின் கொரோனா நிதிக்கு ரூ .151 கோடியை நன்கொடையாக அளிக்கும் போது, நமது நாட்டின் துணிச்சலான இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அதே மரியாதைக்குரிய ஒரு பகுதியாக, குறிப்பாக இலவச ரயில் பயணத்தை, கடுமையான துன்பத்தில் இருக்கும் இந்த நேரத்தில் ஏன் கொடுக்க முடியாது? என்று அவர் கேட்டார். 



நமது தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் நமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். அவர்களின் கடின உழைப்பும் தியாகமும் நமது தேசத்தின் அடித்தளமாகும் என்று அவர் கூறினார்.


பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பிய சோனியா, மத்திய அரசின் பொறுப்பு என்ன என்று கேட்டார். "இன்றும் கூட, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வீடுகளுக்கும் குடும்பங்களுக்கும் திரும்ப விரும்புகிறார்கள். ஆனால் அவர்களிடம் போதுமான பணமோ அல்லது அவர்களுக்கு இலவச போக்குவரத்துக்கு ஏற்பாடோ இல்லை" என்று அவர் கூறினார்.


நெருக்கடியான இந்த நேரத்தில் மத்திய அரசும் ரயில்வே நிலையங்களும் புலம்பெயர்ந்தோரிடம் ரயில் டிக்கெட் பணத்தை வசூலிக்கின்றன என்பது கவலை அளிக்கிறது என்று இடைக்கால காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.


ஊரடங்கு உத்தரவு அறிவிப்பதற்கு முன்பு மத்திய அரசு நான்கு மணிநேர அறிவிப்பைக் கொடுத்தது. ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு திரும்புவதற்கான வாய்ப்பை மறுத்துவிட்டார் என்று அவர் கூறினார்.


புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வீடு திரும்புவதற்காக கட்டணம் வசூலித்ததற்காக மத்திய அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு மேலும் மத்திய அரசுக்கு சிக்கலை உருவாக்கி உள்ளது. 


நாடு தழுவிய ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததால் பல நகரங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள், திரும்பி வர விரும்புவதோடு, அவர்களுக்காக சிறப்பு ரயில்களை இயக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மையத்திடம் கோரியிருந்தன.


காங்கிரஸ் தொடர்ச்சியான கோரிக்கைகள் வைத்தஇபோதிலும், மத்திய அரசும் ரயில் அமைச்சகமும் இதை முற்றிலும் புறக்கணித்துள்ளன என்று சோனியா கூறினார்.