காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணா பாஜக-வில் இணைகிறார்
காங்கிரசிலிருந்து விலகிய காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் எஸ்எம் கிருஷ்ணா பாஜக-வில் இணைய உள்ளார்.
புதுடெல்லி: காங்கிரசிலிருந்து விலகிய காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் எஸ்எம் கிருஷ்ணா பாஜக-வில் இணைய உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்எம் கிருஷ்ணா கர்நாடகா முதல்வராகவும், மத்திய வெளியுறவு அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த ஜனவரி 29-ம் தேதி இவர் கட்சி மேலிடம் தன்னை மதிக்கவில்லை எனக்கூறி காங்கிரசிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். மேலும் கடந்த 6-ம் தேதி கிருஷ்ணாவை, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா நேரில் சந்தித்து பாஜக-வில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் எஸ்எம் கிருஷ்ணா இன்று டெல்லி வருது நாளை பாஜக தலைவர் அமித் ஷாவை சந்திக்க உள்ளார். மேலும் 16-ம் தேதி பாஜக-வில் இணைவார்.
எஸ்எம் கிருஷ்ணா பாஜக-வில் இணையும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் சதானந்தகவுடா, ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து கொள்வர். இதன் பின்னர், அவர் பிரதமர் மோடியையும் சந்திப்பார்.