வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தியின் சொத்து விவரம்!
காங்கிரஸின் தலைவரான பிரியங்கா காந்திக்கு சொந்தமாக 7.74 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் கட்டிடங்கள் உள்ளன. இதில் புதுதில்லியில் உள்ள பரம்பரை நிலமும் அடங்கும்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வத்ராவின் சொத்து மதிப்பு தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இவர்களிடம் மொத்தம் சுமார் 78 கோடி சொத்து உள்ளது. வயநாட்டில் மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ள நிலையில் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்கள் குறித்த தகவல்களை வழங்கி உள்ளார். அதில் 12 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் தனது பெயரில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதில் பொருட்களை தன்னிடம் இருப்பதாகப் பகிர்ந்துகொண்டார். இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் சுமார் 5.63 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வீடு உள்ளதாகவும் அவர் கூறினார்.
ராபர்ட் வத்ராவிடம் சுமார் ரூ. 65.54 கோடி சொத்துக்கள்
தனது கணவர் ராபர்ட் வதேராவிடம் 37.9 கோடி ரூபாய்க்கு மேல் அசையும் சொத்துகள் இருப்பதாகவும், ரூ. 27.64 கோடிக்கு வீடு, நிலம் போன்ற அசையாத சொத்துக்கள் இருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் அறிவித்துள்ளார். பிரியங்கா காந்தி வத்ரா மொத்தமாக 2023-2024 ஆம் ஆண்டில் ரூ. 46.39 லட்சம் சம்பாதித்துள்ளார். வாடகை மூலமும், வங்கிகள் மற்றும் பிற இடங்களிலிருந்து வரும் வட்டி மூலமும் இந்த வருமானம் கிடைத்துள்ளது. பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களையும் தெரிவித்துள்ளார் பிரியங்கா காந்தி. 4.24 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் தன்னிடம் இருப்பதாக அவர் கூறினார். இதில் அவரது கணவர் ராபர்ட் கொடுத்த கார், பல்வேறு வங்கிக் கணக்குகளில் சேமித்த பணம், 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள 4,400 கிராம் தங்கம் ஆகியவை அடங்கும்.
பிரியங்கா காந்தி
பிரியங்கா இங்கிலாந்தில் உள்ள சுந்தர்லேண்ட் பல்கலைக்கழகத்தில் புத்த மதத்தைப் பற்றி தொலைதூரக் கல்வி மூலம் முதுகலை டிப்ளோமா படித்துள்ளார். மேலும் அவர் இந்தியாவில் உள்ள டெல்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்துள்ளார். இதுவரை 15 முறை கடன் வாங்கியுள்ளார். பிரியங்கா காந்தி மீது கடந்த 2023ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிசியின் 420, 469 ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொய்யான தகவலை கூறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் 2020ல் உத்தரபிரதேசத்தில் பிரிவு 188, 269, மற்றும் 270 ஆகியவற்றின் கீழ் மற்றொரு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்தார். இந்நிலையில் அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் தனது தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி அறிவித்தார். "பிரியங்கா எப்போதும் அனைத்தையும் தியாகம் செய்யும் ஒருவராக இருக்கிறார். அவருக்கு வயநாட்டு ஒரு குடும்பம் போன்றது. நீங்கள் எனக்கு ஆதரவு தந்தது போல அவருக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்" என்று ராகுல் காந்தி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ