மதுவுக்கு பதிலாக கஞ்சா மற்றும் பாங்குவை உட்கொள்ள வேண்டும்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை
Chhattisgarh News: மதுவுக்கு பதிலாக பாங்கு-கஞ்சாவை ஊக்குவிக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் மஸ்தூரி சட்டசபை எம்எல்ஏவும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கிருஷ்ணமூர்த்தி பந்தி, மதுவிலக்கு குறித்து புதிய சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி பந்தியின் கூற்றுப்படி, சத்தீஸ்கர் மக்கள் மதுவுக்கு பதிலாக "பாங்கு மற்றும் கஞ்சாவை" பயன்படுத்த வேண்டும். இதுமட்டுமின்றி, மதுவிலக்குக்காக அமைக்கப்பட்டுள்ள சட்டசபைக் குழுக்கள், போதைக்காக பொதுமக்களை கஞ்சா, பாங்கு போன்றவற்றை பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த பொருட்களுக்கு அடிமையானவர்கள் கற்பழிப்பு, கொலை மற்றும் கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடுவதில்லை என்று விளக்கமும் அளித்துள்ளார். பாஜக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பந்தின் அறிக்கையை அடுத்து, பொதுமக்கள் பிரதிநிதி எப்படி போதை பழக்கத்தை ஊக்குவிக்க முடியும் என்று ஆளும் காங்கிரஸ் கேள்வி எழுப்பி வருகிறது.
முன்னாள் சுகாதார அமைச்சரும், மஸ்தூரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பந்திடம் செய்தியாளர்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இன்னும் மதுவிலக்கை அமல்படுத்தவில்லையா என்ற கேள்வி கேட்ட போது, அதற்கு பதிலளிக்கையில், மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் அபத்தமான வகையில் கருத்து தெரிவித்துள்ளார். மதுவுக்கு பதிலாக கஞ்சா, பாங்கு போன்றவற்றை உட்கொள்ளுமாறு மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
அவர் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும் போது, "நாங்கள் ஏற்கனவே மாநில சட்டமன்றத்தில் இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளோம், ஜூலை 27 அன்று மீண்டும் விவாதமாக எழுப்பப்படும். அன்றைய தினம் எதிர்க்கட்சியான பாஜக, ஆளும் மாநில அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேச மீது திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
மேலும் படிக்க: Election: இந்த ஏழு மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடக்கலாம்?
இது எனது தனிப்பட்ட கருத்து, கடந்த முறை சட்டசபையில் இதுபற்றி விவாதித்தேன். பலாத்காரம், கொலை, தகராறு போன்றவற்றுக்கு மதுதான் காரணம் என்று கூறியிருந்தேன். பாங்கு உட்கொள்பவர்கள் எப்போதாவது கற்பழிப்பு, கொலை மற்றும் கொள்ளைச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறாரா? எனக் கேள்வி எழுப்பினர்.
நாட்டில் போதைப்பொருள் தேவையை பூர்த்தி செய்யவும், மதுவிலக்கை தடை செய்யவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பாங்கு மற்றும் கஞ்சாவை நோக்கி நாம் எவ்வாறு முன்னேறுவது என்பதை குழு சிந்திக்க வேண்டும். மக்கள் போதைப்பொருளை விரும்பினால், கொலை, கற்பழிப்பு மற்றும் பிற குற்றங்களில் விளைவிக்காத இதுபோன்ற பொருட்களை அவர்களுக்கு வழங்க வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க: போதையில் மிதக்கும் கல்லூரி இளசுகள்; வெளியான அதிர்ச்சி வீடியோ
பாஜக எம்எல்ஏவின் கருத்துகள் குறித்து கேட்டதற்கு, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சத்தீஸ்கர் மாநில முதல்வர் பாகேல், எந்த வடிவத்திலும் போதைக்கு அடிமையாவது நல்லதல்ல என்றார். மேலும், நாட்டில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றால், மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏவை அவர் கடுமையாக சாடினார். 10 கிராம் கஞ்சாவை கைப்பற்ற மும்பையில் மத்திய அமைப்புகள் அலையும் போது, அதன் (பாஜக) மூத்த தலைவர் கஞ்சாவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். கஞ்சா தடை செய்யப்பட்டுள்ளது, அவர் முதலில் அதை அனுமதிக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் மற்றும் எந்த விதமான போதையும் நல்லதல்ல என்றார்.
காங்கிரஸின் பிலாஸ்பூர் மாவட்ட செய்தித் தொடர்பாளர் அபய் நாராயண் ராய் கூறுகையில், மூன்று முறை எம்எல்ஏவாகவும், முன்னாள் மாநில சுகாதாரத்துறை அமைச்சராகவும் உள்ள பந்தி, சமூகத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைக் கூறுவதற்குப் பதிலாக போதைப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற அறிக்கையை எப்படிக் கொடுக்க முடியும். "போதைக்கு அடிமையாக இருக்க முடியாது. நாகரீக சமுதாயத்தில் இதுபோன்ற முதிர்ச்சியற்ற கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்று ராய் கூறினார்.
மேலும் படிக்க: இந்தியாவில் இந்த சர்வாதிகாரத்துக்கு 'உண்மை' தான் முடிவு கட்டும் -ராகுல் காந்தி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ